இயற்கை தன்னுள்ளே அளப்பரிய சித்திரங்களை சிப்பிக்குள் முத்தாய் மறைத்து வைத்துள்ளது. நாம் தான் கண்ணிருந்தும் குருடராய் அவற்றையெல்லாம் நின்று நிதானிக்கும் பொறுமையற்றவராய் கண்டும், காணாதது போல் கடந்து சென்று விடுகிறோம். ஆனால், தானுணர்ந்த, அணுவணுவாய் ரசித்த கானகத்தின் அழகியலை அலுப்பின்றி இந்நூலில் பருகத் தந்திருக்கிறார் ஆசிரியர் ராம் தங்கம் அவர்கள். நூலின் அட்டைப்படமொன்றே போதும் நம் சிந்தையைக் கவர...
‘திருக்கார்த்தியல்’ வாசிப்பனுபவம் – ஜானகி ராம்ராஜ்
திருக்கார்த்தியல் பதினோரு கதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. ‘அசோகமித்ரன் விருது, சுஜாதா விருது, மற்றும் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதுகளைப் பெற்றுள்ளது’. ஒவ்வொரு கதையும் ஒரு தனிச்சிறப்பு (unique). கன்னியாகுமரி மாவட்ட வட்டார மொழி வழக்கில் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க எந்தத் தடையுமில்லா எழுத்துநடை. ஒரு சில வார்த்தைகள் பரிட்சயமில்லாததாக இருந்தது. மற்றபடி கதைகளை வாசிக்க எந்தவித...
‘புலிக்குத்தி’ அணிந்துரை – உமா ஷக்தி
கண்ணீரும் புன்னகையும் ஒருசேர வாசிப்புக்கு உள்ளாக்கிய கதைகள் அடங்கிய தொகுப்பு ‘புலிக்குத்தி’. ராம் தங்கத்தின் முதல் தொகுப்பான திருக்கார்த்தியல் புதிய எழுத்தாளர் ஒருவரின் தேர்ந்த எழுத்து வன்மையை வாசகருக்கு அறிமுகப்படுத்தியது. நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளராக அவர் வாசகப் பரப்பிலும், எழுத்தாளர்களின் மத்தியிலும் அறியப்பட்டு அத்தொகுப்பிற்காகப் பல விருதுகளையும் வாங்கினார். அடுத்து வெளியான அவரது ராஜவனம்...
‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை- அழகுநீலா ஜெயராம்
ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் தொகுதியின் பதினோரு கதைகளும் வேறுபட்ட பதினோரு தளங்கள். ஆனால் பெரும்பாலானவற்றின் கதை மாந்தர்கள் சிறுவர்களே. நம்முடன் அல்லது நம் அருகாமையில் வாழும் மனிதர்கள் பற்றிய கதைகள். எல்லாருமே குமரி மாவட்டத்து நிஜ மாந்தர்கள். வாழைக்கா அப்பம், அவியல், சாயா, மார்ஷல் நேசமணி,நாரோலு, சுசீந்திரம், கன்னியாகுமரி, வெள்ளமடம், அழகியபாண்டிபுரம் என நாஞ்சில் நாட்டின் மணம் வீசும் கதைகள்...
‘புலிக்குத்தி’ விமர்சனம்- யுவராஜ் மாரிமுத்து
புலிக்குத்தி! – புன்னகையை தொலைக்க செய்த அதிகாரம்! “திருக்கார்த்தியல்” சிறுகதை தொகுப்பை தொடர்ந்து எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய “புலிக்குத்தி” சிறுகதை தொகுப்பு மொத்தம் ஒன்பது சிறுகதைகளை கொண்டுள்ளன. ஒன்பது சிறுகதைகளுமே இச்சமூகத்தில் அதிகாரம் தவறாக கையாளப்படுவதால் புன்னகையை தொலைத்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசுகிறது. அம்மாவோ அல்லது அப்பாவோ இல்லாத விளிம்புநிலை...
திருக்கார்த்தியல் – கடிதம்- இரா.மகேஷ்
வணக்கம் தோழர், ஒரு உச்சி பொழுதில் மனம் நிலையற்ற தன்மையில் அலைந்து கொண்டிருந்த தருணத்தில் வீட்டில் இருந்து கிளம்பி எங்கு செல்வது என தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தேன். சினிமாவிற்கு செல்லலாம் என்று யோசனை ஒருபுறம் இருந்தாலும் மதிய காட்சிக்கு நிறைய நேரம் இருந்தது மேலும் நிலைகொள்ளாமையை அதிகரித்தது. உள்ளம் எரிச்சல் அடைவதை ஒரு பக்கம் உணரவும் முடிந்தது. சரி சற்று நிதானிக்கலாம், மனத்தை முதலில்...
‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை – இர. மௌலிதரன்.
ராம் தங்கம் அவர்களுக்கோ, இந்த சிறுகதை தொகுப்பிற்கோ எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை இன்றைய சூழ்நிலையில் தேவைப்படாது என்று தான் எண்ணுகிறேன். ஏனெனில், இந்த வருடம் பெரிதும் பேசப்பட்ட, வாசிக்கப் பட்ட ஒரு புத்தகம் இது. அந்த வகையில் எனக்கும் ராம் தங்கம்- இன் எழுத்து புதிதானது தான். எனக்குள் பல விதமான கலவையான எண்ண ஓட்டங்களை ஓட வைத்துள்ளார் அவர். ஒரு சிறுகதை தொகுப்பில் எத்தனை கதைகள் இருந்தாலும், அந்த...
திருக்கார்த்தியல் வாசிப்பனுபவம் – சிவமணி
நாரோயில் என்று நண்பர்கள் பேசும் போது சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். இது போன்று வட்டார வழக்குகளை தாங்கி வந்திருக்கும் ராம் தங்கத்தின் வைரம் தான் இந்த திருக்கார்த்தியல். பெரும்பாலான கதைகளில் அம்மா-மகன், தாத்தா-பேரன், பாட்டி-பேரன், அனாதை சிறுவன், மனநிலை பாதிக்கப்பட்டவர், பசி, ஏக்கம் என்று எல்லாக் கதைகளிலும் ஏதோ ஒரு உறவை இழந்த தவிப்பும், வெறுமையும், ஏக்கமும் என்று பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது. இதில்...
திருக்கார்த்தியல் வாசிப்பனுபவம்- அய்யனார்
அண்ணன் ராம் தங்கம் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் தங்களின் திருக்கார்த்தியல் நூல் கடந்த வாரம் கிடைத்தது. நேரம் கிடைக்கும் போது ஒருவழியாக வாசித்து முடித்தேன். நாஞ்சில் நாட்டுக் கதைகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. திருக்கார்த்தியல் தொடங்கி கடந்து போகும் வரை பதினொரு கதைகளும் கண்களை கசிய வைத்தன. குருதியெழும்பி நரம்புகளை புடைக்க வைத்தன. நல்ல சிறுகதை நூலை வாசித்து முடித்த மனநிறைவைத் தந்தது. மீண்டும்...
திருக்கார்த்தியல்- கடிதம்- திவ்யா
அன்புள்ள ராம் தங்கம் அவர்களுக்கு, வாழ்த்துக்கள். திருகார்த்தியலை ஒரு வழியாக வாசித்து முடித்து விட்டேன். மேற்கொண்டு வாசிக்க முடியாமல் திணறிப் போன பல இடங்களும், மனிதர்களும் அதற்கு ஒரு காரணம். வாங்கி வந்த அன்றைக்கே கார்த்திக்கின் வாழ்க்கையைப் படித்ததாலோ என்னவோ மேற்கொண்டு நகரவே முடியவில்லை.ஒரு நாள் முழுதும் கார்த்திக் எங்கே போயிருப்பான், திரும்பி அவனைப் பார்ப்போமா, அடுத்த கதைகளில் வந்து விட மாட்டானா...