Latest stories

‘தகவு இதழ்’ நேர்காணல்

                                                                                          படைப்பு இலக்கிய குழுமத்தின் ‘தகவு’ மின்னிதழில் வெளிவந்த  நேர்காணல். 1.ராஜவனம் எனும் நாவல் எழுதக் காரணமாக இருந்தது? இயற்கை சார்ந்த ரசனை தான் முக்கிய காரணம். அடிக்கடி காடு சார்ந்த இடங்களுக்கு பயணம் செல்வது ராஜவனம் எழுத ரொம்ப தூண்டுதலாக இருந்தது. வேறு எல்லா வாழ்க்கை முறையையும் நம்முடைய கற்பனையில்...

தினமலர் நேர்காணல்.

3-3-2024 அன்று மதுரை பதிப்பு, தினமலர் நாளிதழில் வெளிவந்த நேர்காணல். நாஞ்சில் மண்ணின் இளம் எழுத்தாளரான ராம் தங்கம் தமிழின் குறிப்பிடதக்க எழுத்தாளராக உருவெடுத்துள்ளார். பல்வேறு இதழ்களில் பணிபுரிந்த இவர் இப்போது முழு நேர எழுத்தாளர். இவரது சிறுகதைத் தொகுப்பான ‘திருக்கார்த்தியல்’  2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றுள்ளது. காந்திராமன், ஊர்சுற்றிப் பறவை...

தினத்தந்தி நேர்காணல்

24-2-2024 அன்று  தினத்தந்தி நாளிதழில் வெளியான நேர்காணல். வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் அதிக கவனம் பெறுகிறார் ராம் தங்கம். கன்னியாகுமரி மாவட்ட வாழ்வியலை அடிப்படையாக கொண்டு 12க்கும் மேற்பட்ட கதை நாவல் வரலாற்று தொகுப்பு புத்தகங்களை எழுதியிருக்கும் இவருக்கு சமீபத்தில் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. அதையொட்டி ராம் தங்கத்துடன் சிறு நேர்காணல். * உங்களை பற்றி சிறு அறிமுகம்...

‘வாரணம்’ மதிப்புரை – சுனிதா கணேஷ்குமார்

“வாரணம்” என்ற இந்த நூலின் ஆசிரியர் ராம் தங்கம் சமீபத்திய சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது (2023) தன்னுடைய “திருக்கார்த்தியல்” என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக பெற்றவர். ஊர்சுற்றிப் பறவை, ராஜவனம், புலிக்குத்தி போன்ற நூல்களும் சிறப்பானவை. இவர் எழுதிய ராஜவனம் என்ற நூலின் தொடர்ச்சியாக “வாரணம்” தோற்றம் கொண்டுள்ளது. வாரணம் என்றால் யானை என்றொரு பொருளுண்டு...

‘வாரணம்’ மதிப்புரை – சீதாலட்சுமி

உலகில் நாம் எங்கே சுற்றித்திரிந்தாலும் திரும்பி வந்து நம் வீட்டில் கால்களைக் கீழே கிடத்தி உறங்குவது பெரும் இன்பம். எவ்வளவுதான் நகர வாழ்க்கையில் இருந்தாலும் நம் தாய் வீடான நம் காட்டிற்குச் செல்லும் பொழுது ஆதிகாலத்தை உணர்ந்தது போல் ஆகும் அந்த உணர்வைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு வார்த்தைகளின் மூலமாகவும் எழுத்துக்களின் மூலமாகவும் யானைக் கூட்டங்களுடனும் பறவைக் கூட்டங்களுடனும் விலங்குகளுடனும்...

‘வாரணம்’ மதிப்புரை – சிவராமன்

2024 ஆம் ஆண்டின் முதல் புத்தகமாக நான் வாசித்தது எழுத்தாளர் ராம் தங்கம் அவர்கள் எழுதிய “வாரணம்” என்ற நாவல். நீண்ட காலத்துக்குப் பின் ஒரு 300 பக்கங்கள் உடைய நாவலை ஒரே நாளில் படித்து முடித்தேன். “புத்தகங்கள் எப்பொழுதுமே நம்மை ஒரு காலப்பயணியாக மாற்றுகிறது” என்று நான் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறேன். அப்படி இருக்க, இந்த “வாரணம்” என்ற படைப்பு தற்காலத்தில் நான்...

‘வாரணம்’ மதிப்புரை – அருந்ததி ரவிசங்கர்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு காடு உண்டு. காட்டின் மணத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. அதனால்தான் காடு சார்ந்த புத்தகங்களைப் படிக்கும் போது, வாசிப்பில் கொஞ்சம் அதிகம் ஊறிப் போகத் தோன்றுகிறது. ஏற்கனவே ராம் அவர்களின் ராஜவனம் படித்து வனத்திற்குள் மனம் தொலைத்தேன். இப்போது வாரணம் அதையும் தாண்டி, சில்மர் எஸ்டேட் காட்டிற்குள் கை பிடித்து ஆனை ராஜசேகர் அவர்களுடன் சென்றுவிட்டேன். இன்னும்  திரும்ப...

‘புலிக்குத்தி’ மதிப்புரை – ப்ரியா

                                                                                ராம் தங்கம் அவர்களின் புலிக்குத்தி சிறுகதைத் தொகுப்பைப் படித்த நாளிலிருந்தே அதுகுறித்து எழுத வேண்டுமென்று யோசித்து நேரம் வாய்க்காமையால் தள்ளிப் போய் இன்று நிறைவேறியிருக்கிறது. இவரின் “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பின் விளிம்பு நிலை மனிதர்களின் நீட்சியாகவே நான் இந்தத் தொகுப்பையும் பார்க்கிறேன். அதில் இடம்...

‘புலிக்குத்தி’ வாசிப்பனுபவம் – கீரனூர் ஜாகிர் ராஜா

ராம் தங்கத்தின் புலிக்குத்தி வாசித்தேன். நாகர்கோவிலிலிருந்து பொன்னீலன், நாஞ்சில்நாடன், தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன் எனப் புறப்பட்டு வந்த  கதாகாரன்மாரின் தடமொற்றி வந்த தம்பி, கிளர்ச்சி தரும் குமரி மண்ணின் நாட்டார் மொழி நேர்த்தியுடன் கலாபூர்வமாகத் தன் புனைவுகளை முன்வைக்கிறார். பனங்காட்டு இசக்கியும், கம்யூனிஸ்ட் நேதாவும், அடைக்கலாபுரத்து இயேசுவும், பஞ்சுமிட்டாயும்….கதை ஜீவாவும்...

‘வாரணம்’ மதிப்புரை – கார்த்திகேயன் புகழேந்தி

2023-ல் சூழலியல் சார்ந்து தமிழில் வந்திருக்கும் புனைவுகள், அபுனைவுகளையே சென்னை புத்தகக் காட்சியில் அதிகம் வாங்கியிருந்தேன் என்பது இந்த வருடம் புத்தக அலமாரியை ஒதுக்கும்போது தெரிந்தது. போன மாதம் அடையார் ஒடிஸிக்குச் சென்றிருந்த போது ‘She leads – The Elephant matriarch’ படக்கதை புத்தகத்தை அங்கேயே புரட்டி பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தேன். இந்த ஞாயிறு இந்தியா- ஆஸ்திரேலியா...