‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை- அழகுநீலா ஜெயராம்


ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் தொகுதியின் பதினோரு கதைகளும் வேறுபட்ட பதினோரு தளங்கள். ஆனால் பெரும்பாலானவற்றின் கதை மாந்தர்கள் சிறுவர்களே. நம்முடன் அல்லது நம் அருகாமையில் வாழும் மனிதர்கள் பற்றிய கதைகள். எல்லாருமே குமரி மாவட்டத்து நிஜ மாந்தர்கள். வாழைக்கா அப்பம், அவியல், சாயா, மார்ஷல் நேசமணி,நாரோலு, சுசீந்திரம், கன்னியாகுமரி, வெள்ளமடம், அழகியபாண்டிபுரம் என நாஞ்சில் நாட்டின் மணம் வீசும் கதைகள். தன்னை நேசிக்கும் சிறுவனை எந்த நிபந்தனையுமின்றி நேசிக்கும் டாக்டர் அக்கா. மின்மினிப் பூச்சி கொள்ளையர், தீவட்டிக் கொள்ளையர், சாமியாட்டம், ஊர்த் திருவிழா, கோட்டை வீடு, அதன் தன்மைகள் பற்றிச் சொல்லும் பெரிய நாடார்.

காணி மனிதர்களுக்காக சேவை செய்யும் கம்யுனிஸ்ட் தோழர் காணி வாத்தியார். நாம் யாரைக் குற்றம் சொல்வது? .அந்தபெண்ணையா? சுற்றியுள்ள மனிதர்களையா? என்று திகைக்க வைக்கும் ஊழிற் பெருவலி. ரௌடியான கணவனுக்கு வாழ்கைப்பட்ட பெண்களின் வாழ்வு, தொடர்ந்து வரும் துயரங்கள். கள்ளச் சாராயம் காய்ச்சும் குடும்பம், அவர்களுக்கு ஏற்பட்ட  விபத்து, மரணம், அதனால் நிலைகுலையும் சிறுவனின் வாழ்வு என்று நாம் அன்றாடம் கேள்விப் படும்மனிதர்கள்.

அந்த சிறுவனுக்கு ஒரு கொழுக்கட்டை கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ராம். எதையும் எளிதில் கடக்க முடியவில்லை ராம். ஒவ்வொன்றும் யோசிக்க வைக்கிறது. உன் கதை சொல்லும் பாங்கு வாசிக்கும் போது கதையின் ஜீவனை உணர வைக்கிறது. ராம் தங்கம் என்ற அன்பு சிறுவன் மேன்மேலும் எழுத்தில் பெருமை அடைய வாழ்த்துகள்- அழகுநீலா ஜெயராம்

About the author

ramthangam

Add comment

By ramthangam