Home

Latest stories

புலிக்குத்தி: நாஞ்சில் நாட்டுக் கதைகள் -சுப்பிரமணி இரமேஷ்

தமிழ்ச் சிறுகதை தற்போது பல்வேறு உடைவுகளைச் சந்தித்திருக்கிறது. மனிதர்களின் அக நெருக்கடிகளுக்குப் பின்னே மறைந்திருக்கும் நவீன வாழ்க்கை குறித்த போதாமைகளும் தனிமைத் துயரங்களும் இரண்டாயிரத்திற்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைகளில் காத்திரமாக எதிரொலித்தன. நவீன கோட்பாடுகளின்மீது நம்பிக்கையிழந்த பலர் மீண்டும் யதார்த்தவாதத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். இதில் ராம் தங்கமும் ஒருவர். சிறுகதை, நாவல்...

‘ராஜவனம்’ வாசிப்பனுபவம் – – ரஞ்சித் பிரபு

வனம் என்பது எப்பொழுதுமே என் காதலுக்குறிய இடம்.பெயருக்கேற்றார் போல ராஜவனம் மிகவும் பிரமிப்பை உள்ளடக்கிய அடர்ந்த நாவல். வெறும் 80 பக்கங்களில், விலங்குகள் பறவைகள் தாவரங்களை பற்றிய ஆழ்ந்தறிந்த தகவல்கள் ஏறாளம். ஆசிரியரின் வனத்தை பற்றிய புரிதலும் அன்பும் இதனூடே நன்று தெரிகிறது. பழங்குடி மக்களின் வாழ்வியல் மருத்துவம் மற்றும் சடங்கு முறைகள் மூலம் நாம் தொலைத்தஇந்த ராஜவனத்தின் ரட்சகனான”ஆன ராஜேந்திரன்...

‘ராஜவனம்’ வாசிப்பனுபவம் – ரகுராவணன்

மூன்று இளைஞர்கள் ஆறு உருவாகி வரும் மூலத்தை அறிய வெகு நாட்களாக ப்ளான் செய்து முடியாமல் போக, கடைசியாக ஒரு நாள் முடிவு செய்து நதிமூலத்தை அறியும் ஆவலுடன் காட்டில் ஏறி மலை உச்சியை நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்யும் மூவரில் ஒருவனின் பெயர் கோபால். அவனின் தந்தை வனத்துறை அதிகாரியாக அதே மலைக் காடுகளில் பணி புரிந்தவர். அவர் அந்த காடுகளைப் பற்றியும் அங்கு வாழும் மிருகங்கள், வன தேவதைகள்...

‘ராஜவனம்’ வாசிப்பனுபவம் – நடராஜன் செல்லம்

இந்த ராஜவனம் ஒரு இனிமையானகாட்டுக்குள் ஒரு குளுமையான பயணம் செய்து தருணமாக இருந்தது. “ஊர் சுற்றிப் பறவை” வாகனத்தில் அந்த நகரை சுற்றி காட்டிய மனுஷன் இதில் இந்த காட்டையும் நதியின் மூலத்தையும் தேடிச் சென்ற மூன்று நண்பர்களை பற்றியும் சொல்கிறார் ஆசிரியர். இந்தப் பயணம் அந்த காட்டில் ஒருமுறை சென்று வந்த உணர்வை நமக்குள் தந்துவிடும் அதை யாரும் மறுக்க முடியாது. கோபால் ஆன்றோ ராஜேஷ் இந்த மூன்று நண்பர்களும்...

குங்குமம் இதழ் நேர்காணல்

குங்குமம் 14-7-2023 இதழில் வெளிவந்த நேர்காணல். நேர்காணல் செய்தவர் பேராச்சி கண்ணன் சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது நாகர்கோவில் இளம் எழுத்தாளர் ராம் தங்கத்திற்குக் கிடைத்திருக்கிறது. அவரின் ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளாகவே சாகித்ய அகடமியின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற நூல்தான். ஆனால், இந்தாண்டே ராம் தங்கத்தின்...

‘ராஜவனம்’ அணிந்துரை – ஜோ டி குருஸ்

மனதின் ஆழ் உறக்கம் கலைக்கும் பயணம். நான் கடலோரவாசி. எனக்கு கடலும் கடலோரமுமே பிடித்தமான இயற்கைச் சூழல்கள். பயணங்களில் வனங்களைக் கடந்திருந்தாலும் நடை பயணமாய் வனத்தைக் கடக்கும் வாய்ப்பு இன்று வரை கிட்டவேயில்லை. அந்தக் குறையை எழுத்தாளர் ராம் தங்கத்தின் ‘ராஜவனம்’ என்ற இந்தப் பதிவு தீர்த்து வைத்திருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. வாழ்வின் சுவாஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும்...

‘ராஜவனம்’ கடிதம் – நாஞ்சில்நாடன்

ராஜவனம் வாசித்தேன். தமிழுக்கு புது வகை நாவல். கதையின் முடிவு ரொம்ப நல்லா இருக்கு. அதிலும் அந்த கோபால் காணிக்காரர்களிடம் வந்து சேர்ந்த பிறகு கதை ரொம்ப வலுவா இருக்கு. காணிக்காரர்களின் சடங்குகள், தாவரங்கள், உணவுகள் பற்றி ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. இதை இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதி இருக்கலாமோன்னு எனக்கு தோணுச்சு. வாசிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு, நிறைய தகவல்கள் இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு. ...

‘ராஜவனம்’ கடிதம்

ராம் தங்கம் அவர்களுக்கு
வணக்கம்
‘ராஜவனம்’ குறுநாவல் நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது.
சிறிய எல்லை பரப்புக்குள் எத்தனை சாத்தியங்களை நிகழ்த்த முடியுமோ, அதைக் கடத்த சாத்தியங்களை நிகழ்த்தியிருக்கிறீர்கள். நன்றி மறவாத புலிக்கு நிகராக ராஜசேகரை மறவாதவர்களாக வனமனிதர்களையும் காட்டி முடித்திருப்பது நல்லமனமாக இருந்தது. வாழ்த்துகள்.
நன்றி
த.அரவிந்தன்

‘ராஜவனம்’ மதிப்புரை – திவாகர். ஜெ

இயற்கை தன்னுள்ளே அளப்பரிய சித்திரங்களை சிப்பிக்குள் முத்தாய் மறைத்து வைத்துள்ளது. நாம் தான் கண்ணிருந்தும் குருடராய் அவற்றையெல்லாம் நின்று நிதானிக்கும் பொறுமையற்றவராய் கண்டும், காணாதது போல் கடந்து சென்று விடுகிறோம். ஆனால், தானுணர்ந்த, அணுவணுவாய் ரசித்த கானகத்தின் அழகியலை அலுப்பின்றி இந்நூலில் பருகத் தந்திருக்கிறார் ஆசிரியர் ராம் தங்கம் அவர்கள்.   நூலின் அட்டைப்படமொன்றே போதும் நம் சிந்தையைக் கவர...

‘திருக்கார்த்தியல்’ வாசிப்பனுபவம் – ஜானகி ராம்ராஜ்

திருக்கார்த்தியல் பதினோரு கதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. ‘அசோகமித்ரன் விருது, சுஜாதா விருது, மற்றும் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதுகளைப் பெற்றுள்ளது’. ஒவ்வொரு கதையும் ஒரு தனிச்சிறப்பு (unique). கன்னியாகுமரி மாவட்ட வட்டார மொழி வழக்கில் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க எந்தத் தடையுமில்லா எழுத்துநடை. ஒரு சில வார்த்தைகள் பரிட்சயமில்லாததாக இருந்தது. மற்றபடி கதைகளை வாசிக்க எந்தவித...