2023-ல் சூழலியல் சார்ந்து தமிழில் வந்திருக்கும் புனைவுகள், அபுனைவுகளையே சென்னை புத்தகக் காட்சியில் அதிகம் வாங்கியிருந்தேன் என்பது இந்த வருடம் புத்தக அலமாரியை ஒதுக்கும்போது தெரிந்தது. போன மாதம் அடையார் ஒடிஸிக்குச் சென்றிருந்த போது ‘She leads – The Elephant matriarch’ படக்கதை புத்தகத்தை அங்கேயே புரட்டி பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தேன். இந்த ஞாயிறு இந்தியா- ஆஸ்திரேலியா...
‘கடவுளின் தேசத்தில்’ விமர்சனம் – சுனிதா கணேஷ் குமார்
இயற்கைச் சூழல் நிரம்பிய ரம்மியமான கேரள மாநிலத்தின் இயற்கையை “கடவுளின் தேசம்” என்று கூறுவது மிகையல்ல. இன்றைய உலகில் மனிதன் சதா தன் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்போது, இயற்கை என்னும் கடவுளை மறந்து போய்தான் இருக்கிறான்.. இந்த நூலின் ஆசிரியர் ராம் தங்கம் விவரிக்கும் மலைச்சரிவுகளையும், தேயிலை தோட்டங்களையும், மலையின் இடுக்குகளில் தவழும் மேக கூட்டங்களையும், சாரல் மழையையும் ரசிக்க...
‘ராஜவனம்’ – விமர்சனம் – காமராஜ் எம் ராதாகிருஷ்ணன்
சுமார் 80 பக்கங்களைக் கொண்ட 70 ரூபாய் நாவல். ஆக ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் கொடுக்கலாம் என்று உங்களுக்கு உடனே தோன்றினால் அது போன்ற மடத்தனம் வேறு இல்லை. படிக்கத் தொடங்கி 7-8 பக்கத்தில் என்ன இது “உங்கள் விடுமுறையைக் கழித்ததை மூன்று பக்கங்களுக்கு மிகாமல் எழுது” என்று பத்தாம் வகுப்பு கேள்விக்குப் பதில் போல் இருக்கிறதே என நினைத்தேன். ஆனால் தோண்டத்தோண்ட வரும் புதையல்கள் போலவும்...
‘ராஜவனம்’ விமர்சனம் – சாந்தி மாரியப்பன்
சிங்கப்பூரின் “மாயா இலக்கிய வட்டம்” நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்ற இக்குறுநாவலின் ஆசிரியர் ராம் தங்கம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். பரவலாகக் கவனம் பெற்று வரும் இளம் படைப்பாளி. சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைத்தொகுப்புகள், வரலாற்று நூல்கள், பயண நூல்கள் என இவருடைய படைப்புகளும் பெற்ற விருதுகளும் ஏராளம். “திருக்கார்த்தியல்” என்ற தொகுப்புக்காக...
‘வாரணம்’ மதிப்புரை – சுமி ஹரி
ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “திருக்கார்த்தியல்” பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. அத்தனை விருதுகளை அள்ளியிருக்கிறது புத்தகம். சமீபத்தில் சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதையும் வென்றிருக்கிறது. இப்படி அறிமுகமான ஆசிரியரின் எழுத்தில் வந்த ராஜ வனத்தையும் வாசித்தேன். அதன்...
‘புலிக்குத்தி’ விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். பயணங்களில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது முழுநேர எழுத்தாளர். சமீபத்திய இந்த சிறுகதைத் தொகுப்புடன் சேர்த்து, இவரது பதினோரு நூல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. காயத்தில் மஞ்சனத்திப் பட்டைத்தூளை நல்லெண்ணெயில் கலந்து பூசுகிறார்கள், சாறைக் குடிக்கத் தருகிறார்கள், கள்வர் நொச்சி இலையின் மணம் காட்டி ஆடுகளைக் கூட்டத்தில்...
‘குமுதம்’ நேர்காணல்
‘இலக்கியக் காட்டாற்றில் நெடுந்தூரம் நீந்த வேண்டும்’ – {குமுதம் இணையதளத்தில் 2023 ஜூலை 7ஆம் தேதி வெளி வந்த நேர்காணல்} யுவபுரஸ்கார்’ விருது கிடைத்துவிட்டதே என தேங்கிவிடக்கூடாது. இதன் மூலமாக இன்னும் கொஞ்சம் கவனம் பெற்றிருக்கிறேன், அவ்வளவே. ‘யுவபுரஸ்கார்’ விருது கிடைத்துவிட்டதே என தேங்கிவிடக்கூடாது. இதன் மூலமாக இன்னும் கொஞ்சம் கவனம் பெற்றிருக்கிறேன், அவ்வளவே. தமிழ்...
‘தகவு இதழ்’ நேர்காணல்
யதார்த்த வாழ்வில் இருந்து கதைகளைச் சொல்லும்போது அவை உயிர்த் துடிப்போடு இருக்கின்றன. {படைப்பு இலக்கியக் குழுமத்தில் இருந்து வெளிவரும் தகவு மின்னிதழில் ஜூலை 2023 ல் வெளியான நேர்காணல். நேர்காணல் செய்தவர் கவிஞர் வீரசோழன். க. சோ. திருமாவளவன்.} உங்களது பூர்வீகம் பற்றி சொல்லுங்கள்? குமரிக்கண்டம் ஆழிப் பேரலையில் தன் நிலப்பரப்பை கடலிடம் இழந்த பிறகு மிஞ்சிய சிறிய பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் தான் என்...
திருக்கார்த்தியல் – சிறுகதை
திருக்கார்த்தியல் இன்னும் இரண்டு நாளில் திருக்கார்த்திகை. மருத்துவாழ் மலையில் பெரிய தீபத்தை ஏற்றுவார்கள். ஊர் முழுக்க கொழுக்கட்டையின் மணம் கிறங்கடிக்கும். சைக்கிள் கடையில், பழைய டயர்கள் விற்பனைக்குக் குவியும். சொக்கப்பனை கொளுத்துவதுபோல முள்கள் நிறைந்த ஒடைமரத்தைக் கொளுத்துவார்கள். செந்தமிழ் தங்கியிருந்த ஹாஸ்டல், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கோவளத்துக்கும் மும்மூர்த்திபுரத்துக்கும் இடையில்...
ராஜவனம் – சக்தி பிரகாஷ்
நாஞ்சில் நாட்டு வனத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுகிறது இந்தப் புத்தகம். நந்தியாறு , முகளியடி மலையில் உற்பத்தியாகிறது.மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் இந்த ஆற்றின் மூலத்தைக் காண ராஜேஷ் , கோபால் மற்றும் ஆன்றோ கிளம்புகிறார்கள் . பயணம் நெடுக அவர்கள் காணும் காட்சியே இந்தப் புத்தகம். வனத்திற்குள் செல்லும்போது அவர்கள் பார்த்த தவிட்டுக்குருவி கூட்டம் , காட்டுமாடு , நாகணவாயன் , குரங்குகள்...