ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இத் தொகுப்பில் உள்ள திருக்கார்த்தியல் கதையை ஆனந்தவிகடனிலும், உடற்றும் பசி சிறுகதையை உயிர் எழுத்து இதழிலும் ஏற்கனவே வாசித்திருந்தேன். இந்த இரு சிறுகதைகளும் மிகச்சிறப்பான கதைகள் என்ற அளவிலான என் மனநிலையிலேயே நான் கடந்து போயிருந்தேன். அதன் பிறகு தொகுப்பு கையில் கிடைத்தபிறகு டாக்டர் அக்கா தொடங்கி ஒவ்வொரு கதையாக வாசிக்கத்...
புலிக்குத்தி – சுனிதா கணேஷ்குமார்
ஒரு பெரு மழையினைச் சொரியத் தயாராகத் திரண்டு, ஒரு குளிர்ந்த காற்றினை எதிர்பார்த்துக் காத்துநிற்கும் கார்மேகம் போல தான் பார்த்துப் பழகிய அனுபவக் கதைகளை எழுத்து தனக்கு வசப்பட்ட பாயும் வெள்ளம் என இந்த புத்தகம் முழுவதிலும் பாய விட்டிருக்கிறார் ஆசிரியர் ராம் தங்கம். முக்கியமாக என்னைக் கவரும் விஷயம் மிகவும் எளிமையான வார்த்தைகள்; ஜாலமற்ற இயல்பாய் அதன்போக்கில் விரியும் கதைகள்தான். சில கதைகளில் நாகரீகம்...
ஊர் சுற்றிப் பறவை – வீரசோழன் க. சோ. திருமாவளவன்
எழுத்தாளர் ராம் தங்கம் சொல்லும் கதை பாணியே எப்போதும் தனித்துவம்தான். அவரின் திருக்கார்த்தியல் கதை படித்து விட்டு பல நேரங்கள் உறக்கமே இல்லாமல் இருந்திருக்கிறேன். அவரின் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு ரகம். தனித்தன்மையோடு மிளிரும். அவ்வளவு சீக்கிரம் சமரசமே இல்லாமல் எழுத்தை அற்புதம் செய்யும் வசீகரன். ஆனால் அவரின் மற்ற புத்தகத்தை விட இதில் கதை சொல்லும் பாணியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட புத்தகமாக...
கடவுளின் தேசத்தில் பாகம்-2 – சுகந்தி
கடவுளின் தேசத்தில் இது இரண்டாம் பாகமாக வெளி வந்துள்ளது. சுற்றுலா நூலாக வந்தாலும் அந்த இடங்களின் வரலாற்றை பேசம் அருமையான நூல். தலச்சேரி பாரிஸ் ஓட்டலில் தலச்சேரி பிரியாணிசாப்பிட்டு சுற்றி பார்க்கலாம். பிரியாணியை அச்சு வேற ஆணிவேறாக வர்ணணை பண்ணியிருக்கார் .சாப்பிடாதவருக்குகூட சாப்பிடத் தோனும். பாரிஸ் ஹோட்டலை எம்.கே. அகமது ஹாஜி என்பவர் 1942 வாக்கில் தொடங்கினார். இலங்கையிலிருந்து திரும்பிய...
திருக்கார்த்தியல் – அகரமுதல்வன்
திருக்கார்த்தியல் -ஊழின் நிழல் ராம் தங்கம் எழுதிய “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பினை வாசித்தேன். இவ்வளவு யதார்த்த பண்பு கூடியதொரு சமகாலப்படைப்பை எனது வாசிப்பில் கண்டதில்லை. வாழ்வின் மீது கவிந்துபோயிருக்கும் கண்ணுக்குத்தெரியாத “ஊழ்” ஒவ்வொரு கதையின் பிரதான கதாபாத்திரங்களின் மீதும் சுழன்றாடுகிறது. இத்தொகுப்பிலுள்ள பதினோரு கதைகளில் நினைவோட்ட உத்தியைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கும்...
ராஜவனம் – கவிதா ஜவகர்
தமிழின் அடுத்த தலைமுறையில் நம்பிக்கை தரும் முக்கியமான எழுத்தாளர். ராம்தங்கம் எழுதிய ராஜவனம். திடுக்கிடும் திருப்பங்களோ, வேகமான நடையோ, திருக்கார்த்தியல் தந்த அதிர்வுகளோ இல்லாத எளிய கதை.முகளியடி மலையில் உருவாகும் நந்தியாற்றின் மூலத்தைக்காண வனம் புகும் மூன்று இளைஞர்களோடு சேர்ந்து நாமும் உள்நுழைகிறோம். நாஞ்சில் நாட்டு பாஷை நம்மைக் கொஞ்சம் தயங்க வைத்தாலும், கதையின் நடையில் ஓடிப்போய் சேர்ந்து கொள்ள...
ராஜவனம் – சுனிதா கணேஷ் குமார்
இந்தப் புத்தகம் சிங்கப்பூர் “மாயா இலக்கிய வட்டம்”நடத்திய குறுநாவல் போட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் உரையில், “எழுதக் கூடியதை சீக்கிரம் எழுதிரனும் இல்லன்னா அது நீர்த்துப் போய்டும்” என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் சொல்லி இருக்கிறதாக குறிப்பிட்டு இருப்பார். அதனால் இந்த புத்தகம் படித்து முடித்த கையோடு இதற்கான மதிப்பு உரையையும் எழுதத்...
ஊர் சுற்றிப் பறவை – நடராஜன் செல்லம்
ராம் தங்கம் அவர்களின் புத்தகத்தை படிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். இந்த புத்தக கண்காட்சியில் அவரின் புத்தகம் வாங்கினேன். முதல் புத்தகம் இதுதான் அவரின் புத்தகம் படிப்பது இதை வாங்கி கொடுத்த கோடி அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆம் நல்ல பயண புத்தகம். இதை வைத்துக்கொண்டு கன்னியாகுமரி நாகர்கோவிலில் ஒரு சுற்று சுற்றிவந்துவிடலாம். சந்து பொந்து கூட போய் வரலாம். இது ஒரு முழுமையான...
திருக்கார்த்தியல் – சுனிதா கணேஷ் குமார்
திருக்கார்த்தியல் அவ்வளவு வலியின் கணத்தை அந்த புத்தகம் தாங்கிக் கொள்ள முடியாமல் படிக்கும் அத்தனை பேர் மீதும் தூக்கி வைக்கும். விளிம்புநிலை மக்களை குறிப்பாக பசியோடும் பஞ்சத்தோடும் பட்டினி கிடைக்கும் குழந்தைகளின், மாணவர்களின் பசியையும் வலியையும் ஏக்கங்களையும் உணர வைக்கிறது. படிக்கும் போது இதை கதையென்று நினைக்க முடியாத அளவிற்கு இயல்பாய் நடந்த ஒன்றை மீண்டும் மீண்டும் நம்முன்னே நடத்திக் காட்டுவது...
திருக்கார்த்தியல் – புண்ணியமூர்த்தி
இதுவரை சந்தோஷ சுடராக அறிமுகமாகியிருந்த திருக்கார்த்திகை ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்பின் மூலம் துயர ஜூவாலைகளாக மாறி நிற்கிறது. பதினொரு கதைகள்தான் புண்ணியம், படிச்சிட்டு சொல்லுங்க என்றார் ராம். ஒவ்வொரு கதையும் தந்த அழுத்தங்களைத் தாங்க முடியாமல் தவித்தபொழுதுதான் பதினொன்றுதானே சீக்கிரம் முடித்துவிடலாமென நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிந்தது. ராமை எனக்கு நன்றாகத்...