வனம் என்பது எப்பொழுதுமே என் காதலுக்குறிய இடம்.பெயருக்கேற்றார் போல ராஜவனம் மிகவும் பிரமிப்பை உள்ளடக்கிய அடர்ந்த நாவல். வெறும் 80 பக்கங்களில், விலங்குகள் பறவைகள் தாவரங்களை பற்றிய ஆழ்ந்தறிந்த தகவல்கள் ஏறாளம். ஆசிரியரின் வனத்தை பற்றிய புரிதலும் அன்பும் இதனூடே நன்று தெரிகிறது.
பழங்குடி மக்களின் வாழ்வியல் மருத்துவம் மற்றும் சடங்கு முறைகள் மூலம் நாம் தொலைத்தஇந்த ராஜவனத்தின் ரட்சகனான”ஆன ராஜேந்திரன் ” போன்றோர் ஒவ்வோர் வனத்திற்கும் தேவை. பாரம்பரியத்தை மீட்டு தருகின்றா்.ஒவ்வொறு உயிரின் தன்மைகளும் குணாதிசயங்களும் கதையின் போக்கினூடே சொல்லபட்டிருக்கும் விதம் அருமை.