ராம் தங்கத்தின் புலிக்குத்தி வாசித்தேன். நாகர்கோவிலிலிருந்து பொன்னீலன், நாஞ்சில்நாடன், தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன் எனப் புறப்பட்டு வந்த கதாகாரன்மாரின் தடமொற்றி வந்த தம்பி, கிளர்ச்சி தரும் குமரி மண்ணின் நாட்டார் மொழி நேர்த்தியுடன் கலாபூர்வமாகத் தன் புனைவுகளை முன்வைக்கிறார். பனங்காட்டு இசக்கியும், கம்யூனிஸ்ட் நேதாவும், அடைக்கலாபுரத்து இயேசுவும், பஞ்சுமிட்டாயும்….கதை ஜீவாவும் வாசகப்பரப்பில் நெடுங்காலம் நீடிப்பார்கள். ராம் தங்கத்தின் எழுத்தும் அரசியலும், அணுகுமுறைகளும் ஜோடனைகளற்ற இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்புகளே என்பதால் தமிழில் அவருக்கான இடம் வெகு விரைவில் உறுதிப்படும். வாழ்த்துகள்.