ராஜவனம் வாசித்தேன். தமிழுக்கு புது வகை நாவல். கதையின் முடிவு ரொம்ப நல்லா இருக்கு. அதிலும் அந்த கோபால் காணிக்காரர்களிடம் வந்து சேர்ந்த பிறகு கதை ரொம்ப வலுவா இருக்கு. காணிக்காரர்களின் சடங்குகள், தாவரங்கள், உணவுகள் பற்றி ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. இதை இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதி இருக்கலாமோன்னு எனக்கு தோணுச்சு. வாசிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு, நிறைய தகவல்கள் இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு. ராஜசேகர் போஷன் நல்லா இருக்கு. அவருடைய போராட்டமே ஒரு தனி நாவலுக்குரிய போராட்டம்தான். தொடர்ந்து எழுதுங்க வாழ்க.