ராஜவனம் புத்தக விமர்சனம்
– தனலட்சுமி
ஓவியத்தில் பார்த்து ரசித்த காடுகளை தனது வார்த்தைகளால் மனதிற்கு உணர்வு பூர்வமான ஒன்றாக கொண்டுவந்துள்ளார் எழுத்தாளர் ராம்தங்கம். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மரம், செடி, கொடி, பூச்சி, விலங்கினங்கள் என அனைத்தையும் உருவகப்படுத்தியுள்ள விதம் படிக்க தூண்டுகிறது. அவற்றின் பெயர், தன்மை, நிறம் யாவற்றையும் மிக நுணுக்கங்களாக விவரித்துள்ளார். அவற்றினை படிக்கும் போது மனதிற்குள் ஒரு மகிழ்வும் பூரிப்பும் ஏற்படுவதை உணரமுடிகிறது.
ராஜவனம் கதை காட்டிற்குள் ஒரு பயணம் என்றே சுருக்கமாக சொல்லலாம். கோபால்,ராஜேஷ் , ஆன்றோ ஆகிய முன்று நபர்களின் வழியாக கதை தொடங்குகிறது. முகளியடி மலையின் உச்சியைக் காணவும், நந்தியாற்றின் மூலத்தை பார்க்கவும் பயணம் செய்யும் இவர்களின் பார்வையில் இருந்து காட்டினை குறித்தான தகவல்களைச் சொல்லியுள்ளார் எழுத்தாளர்.
குரியஒளி தரை தொட சிரமப்படும் நீண்ட உயர மரங்களின் வழியாக நடக்கும் பொழுதில், அவர்களுக்குள்ளாக நடக்கும் உரையாடல்கள் காடுகள் மீதான சந்தேகம் , அதற்கு பதில் என்ற வகையிலே அமைகிறது. பசுமையான மரங்களும் கீச் கீச்பறவைகளும் இசை பாடும் மூங்கில்களும் அவர்களுக்கு, இலக்கை நோக்கி நடக்க உற்சாகப்படுத்துவதாக உள்ளது.. தொடர்ந்து பயணிக்கும் அவர்கள், மலை உச்சி சென்று சேர்கிறார்களா? இடையில் மிருங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்களா? என்பதே மீதி கதை.. அந்த மீதி கதையில் வரும் திருப்பங்கள் மேலும் நம்மை கதையை விட்டு விலக முடியாமல் கட்டிப்போட்டு விடுகிறது …
புத்தகத்தில் ராஜசேகர் பாத்திரமும், காணி பழங்குடியின மக்களும் எனக்கு ரொம்பவே பிடித்தமானவர்களாகிவிட்டனர். ராஜ சேகர் வனகாவலர். வனங்களோடும் வனமக்களோடும் வன உயிரனங்களோடும் அளவு கடந்த நேசிப்பு கொண்டவர். குற்றங்களை தடுக்க, உயர் அதிகாரிகளையும் எதிர்த்து துணைச்சலோடு பணியாற்றியவர். பல திருட்டு தனமான முறைகேடுகளுக்கும், உழல்களுக்கும் எதிராக இவர் இருந்ததாலே திட்டமிட்டு கொல்லப்படுகிறார்.
யானை மீது அவர் கொண்ட பாசத்தாலே ஆன ராஜசேகர் சார் என்று காணி பழங்குடியின மக்களால் அன்போடு அழைப்பட்டார். அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டாய், ஒரு முறை யானைகளின் வலசை பாதையில் விதிமீறி போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 2 குட்டியானை, மூன்று யானைகள் என மொத்தம் 5 யானைகள் பரிதாபமாக இறந்தன..அதை கண்டு அந்த தனியார் தோட்ட முதலாளியோடு சண்டை போட்டார் ராஜசேகர்..அப்போது அந்த செய்தி பத்திரிக்கையில் வெளியாகி, பெரிதாக பேசப்பட்ட நேரம்..இதனால் அந்த பகுதிக்கு வனத்துறை அமைச்சர் பார்வையிட வருகிறார். அப்போதும் வனக்காவலர் ராஜசேகருக்கும் தனியார் தோட்ட முதலாளிக்கும் வாக்குவாதம் பெரிதாக, அமைச்சர் தலையிட்டு சமாதானம் செய்ய முயல்கிறார்.. அந்த சமயத்தில், அமைச்சர் “விடுங்கையா, யானை தான செத்து போயிச்சி; நல்ல வேளை மனுசனுக்கு ஒண்ணு ஆகல்ல” அப்படி என்று சொல்ல, கொதித்தெழுந்த ராஜசேகர் கெட்ட வார்த்தையால் அமைச்சரே திட்டி விடுகிறார்.. பிறகு, அவருக்கு பணியிட மாற்றம் போடப்பட்டாலும் யானை மீது கொண்ட பாசம் சாகும் வரை அவருக்கு குறையவில்லை.
காணி பழங்குடியின மக்களின் பழக்கவழக்கம், நாகரிகம், உடை, உணவு , உறைவிடம் என அனைத்தையும் மாறுப்பட்டவை.. அதை விவரிக்கும் பொறுப்பில், எழுத்தாளர் சிறுதும் பிசுங்காமல் தெளிவாக எழுதியுள்ளார். இப்படியாக தொடரும் கதையில், முடிவில் நந்தியாறும், முகளியடி மலையும் எவ்வாறு முடிக்கப்படுகிறது என்பதை தவறாமல் புத்தகத்தை படித்துத் தெரிந்துக்கொள்ளவும்…
படிக்க வேண்டிய புத்தகம்# அறம் செய்ய விரும்பு # எல் – யா# பேரன்புடன்
(செந்தூரம் இதழில் வெளிவந்த விமர்சனம்)
ராம் தங்கம்
வம்சி புக்ஸ் வெளியீடு
விலை: 70