மிக குறுகிய நேரத்தில் ஒரே மூச்சில் வாசித்து விடக் கூடிய புத்தகம் ராஜவனம். காடும் காடு சார்ந்த அழகையும் சொல்லும் நாவல். முகளியடி மலையின் கருவறையில் இருந்து ஊற்றெடுக்கும் நந்தி ஆற்றின் பிறப்பிடத்தை தேடி அடர் வனத்துக்குள் பயணம் செய்யும் மூவரை சுற்றி அமைந்த கதை.. எழுத்துகள் வழியே நம்மை காட்டுக்குள் அழைத்து செல்கிறார் எழுத்தாளர்..காட்டின் ஒவ்வொரு அசைவையும் நாம் அனுபவித்து கொண்டே வாசிக்கலாம்.காட்டின்...
ராஜவனம்- மதிப்புரை-எஸ். ராமகிருஷ்ணன்
ராம் தங்கம் நம்பிகை தரும் இளம்படைப்பாளி. இவரது திருக்கார்த்தியல் நல்ல சிறுகதைத் தொகுப்பு. இவரது ராஜவனம் என்ற நாவலை வாசித்தேன். எண்பது பக்கங்கள் கொண்ட சிறிய நாவல். முகளியடி மலையிலுள்ள நந்தியாற்றின் மூலம் காணச் செல்லும் பயணத்தின் கதை. காடு நூறாயிரம் உயிர்களின் வாழ்விடம். காட்டின் பிரம்மாண்டம் அதன் மரங்கள். காட்டில் எப்போது இருள் மிச்சமிருக்கிறது. பாதைகளை அழிப்பது தான் காட்டின் இயல்பு...
ஊர் சுற்றிப் பறவை-மதிப்புரை-ராஜேஸ்வரி லெக்ஷ்மணன்
ராம் தங்கம் அவர்களே ஒரு ஊர் சுற்றிப் பறவை. தன் பயணங்களை அழகாக எழுதி வெளியிட்டுள்ளார். அவரின் சிதறால், கடவுளின் தேசத்தில் புத்தகங்கள் வாசிக்கும் போது, அவர் மேலே பொறாமையா இருந்தது. சிதறால், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இதுவரை பார்த்தேயிறாத கோவில்களைக் காட்டியது. கடவுளின் தேசம் கேரளாவின் (சில பகுதிகள்) அழகை வர்ணித்தது. இந்த “ஊர் சுற்றிப் பறவை” புத்தகம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கென்று...
சிதறால்- மதிப்புரை-ராஜேஸ்வரி லெக்ஷ்மணன்
சிதறால் புத்தகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் சில இடங்களை, கோவில்களை, அவற்றோடு இணைந்து கூறப்படும் வரலாற்றை எழுதியிருக்கிறார். இந்திரன் பொற்றை, அதன் பின் உள்ள கதைகள், மையிலாடி-யின் சிற்பங்கள் பற்றிய வரலாறு எல்லாம் நான் மாமியார் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவரது பிறந்த ஊர் அது. சிதறால் குடைவரைக் கோவில், அவ்வையார் கோவில், வடசேரி கொம்மண்டை அம்மன் கோவில், துவாரகை கிருஷ்ணன் என சில கோவில்களின்...
திருக்கார்த்தியல்- ராஜேஸ்வரி லெக்ஷ்மணன்
திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு 2019-ல், அசோகமித்ரன் விருது, சுஜாதா விருது, வடசென்னைத் தமிழ்ச்சங்கம் விருது, படைப்பு இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, அன்றில் இலக்கிய விருது என விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது. தகுதியான சிறுகதைகள். கதைகள் நடக்குமிடம் எல்லாம் நாஞ்சில் பகுதிகள் தாம். மொத்தம் 11 கதைகள். விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை. செந்தமிழும், சிவாவும், அவன் பாட்டியும்...
‘கடவுளின் தேசத்தில்’ மதிப்புரை- ராஜேஸ்வரி லெக்ஷ்மணன்
ராம் தங்கம் அவர்கள் ஊர் சுற்றும் அளவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. “கடவுளின் தேசத்தில்” அவர் தனியாகவும், நண்பர்களோடும் கேரளாவில் சில இடங்களுக்குச் சென்ற பயணத்தை, கண்களால் கண்டவற்றை, இயற்கையின் அழகை அற்புதமாக, அழகாகச் சொல்கையில் நாமும் அவரோடு சேர்ந்து பயணப்படுவது போல் இருக்கிறது. எனக்கு...
கடவுளின் தேசத்தில்- மதிப்புரை- ரா. ராகுல் சே
பயணங்கள் பல வகை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கு என்பதும் செல்லும் பாதை என்பதும் நிச்சயம் இருக்கும். ஆனால் எழுத்தாளர்களுக்கு அது பொருந்தாது. காட்டாற்று வெள்ளம் போல அவர்கள் பயணங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்தவகையில் தான் சென்று வந்த பயணத்தைப் பதிவு செய்த விதம் அற்புதம். வெறும் பயணக் கட்டுரை புத்தகம் அல்ல இது. ஒவ்வொரு இடங்களையும், அதனுடைய வரலாறுகளையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். அது...
கடவுளின் தேசத்தில்- மதிப்புரை- பாலசுப்ரமணியன் மூர்த்தி
இந்த நோயச்ச காலத்தில் வெளியூர் பயணங்கள் செல்வது வாய்ப்பில்லை ,அந்த ஏக்கத்தை செறிவான பயண கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் கொஞ்சம் தீர்த்துக்கொள்ள முடிகிறது . ராம் தங்கம் அவர்களின் “கடவுளின் தேசத்தில்” கேரள பயணக் கட்டுரைகள் மிகச்சிறப்பான வாசிப்பனுபவத்தை தருகிறது. எளிமையான நடை, அதே நேரத்தில் காட்சிகளை கண் முன்னே நிறுத்தும் விவரணைகள். நில காட்சி விவரணைகள், அந்த இடத்தின் வரலாற்று பின்புலம்...
கடவுளின் தேசத்தில்-மதிப்புரை-ராஜேந்திரன் வெங்கடேசன்
தான் சென்ற பயணத்தின் மூலம் பெற்ற அனுபவம் மற்றும் அந்த இடங்களில் உள்ள சிறப்பினை ஒவ்வொரு ஊரின் தலைப்பிலும் தொகுத்திருக்கிறார். மறையூர் முனியறைகள், வைக்கம், வாகமன், கீழ் கோதையாறு, அடிமாலி, தோட்டமலை, திருவனந்தபுரம் பயணம், மாஹி ரயில் பயணம், மாஹி என ஒவ்வொரு இடத்திற்கும் சென்ற வாகனம் முதல் செல்லும் வழிகள், ஆறு, நீர்வீழ்ச்சி, பழம், காய்கள், உணவு, விலங்கு, பறவை, மரம் , விடுதி, அரண்மனை , நினைவு...
ராஜவனம்- மதிப்புரை- பவா செல்லதுரை
ஏற்கனவே திருக்கார்த்தியல் என்ற காத்திரமானதொரு சிறுகதைத் தொகுப்பின் மூலம், தமிழலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்ட ராம் தங்கம், தற்போது ராஜவனம் என்ற ஒரு குறுநாவலின் மூலம் தன்னை இன்னும் இறுக்கமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். வனம், வனம் சார்ந்தச் சூழல், மனிதனுக்கு எப்போதும் அள்ளித்தரும் இயற்கையின் நினைக்கு அரசதிகாரம் என்ற புள்ளிக்கும் தன் ராஜவனத்தை ராம்தங்கம் ஸ்தாபிக்கிறார். எத்தனை...