Latest stories

புலிக்குத்தி – நாஞ்சில் நாடன்

ராம் தங்கத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘திருக்கார்த்தியல்’ நூலை, 4 வருடங்களுக்கு முன்பு வாசித்தேன். அந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதியிருந்தேன். அதில் இடம்பெற்றிருந்த கதைகள் எல்லாமே சிறந்த கதைகள். கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த வட்டார மொழியில் பல கதைகள் இருந்தாலும் கூட, நுட்பமாக எழுதப்பட்ட கதைகள் அவை. 2020-ல் அவர் எழுதிய ‘ராஜவனம்’ குறுநாவலைப் படித்தேன். அதன் இறுதிப் பகுதியை மிகப் பிரமாதமாக...

ஊர் சுற்றிப் பறவை – சரவணன் மாணிக்கவாசகம்

நாகர்கோவிலில் பிறந்தவர். ஊடகத்துறையில் பணியாற்றியவர். திருக்கார்த்தியல் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் பரவலாகத் தெரிய ஆரம்பித்தவர். 2015ல் அச்சுநூலாக வந்த இந்தப்புத்தகம் இப்போது கிண்டிலில் வெளியாகியிருக்கிறது. வரலாற்று நூல் போன்றோ பயணநூல் போன்றோ இல்லாமல் ஒரு அரட்டை அடிக்கும் தொனியில் பலவிசயங்களும் பேசப்படுகின்றன. குமரிமாவட்டத்தில் பிறந்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்கையில் அவர்களது சிறந்த...

செல்லக்கருப்பி

செல்லக்கருப்பி!   சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டும் என்கிற பட்டியலில் இருந்த நாவல் செல்லக் கருப்பி. அதற்குக் காரணம் ‘ பனியோடு வீசும் இளம் குளிர் காற்றைத் தவிர மழை வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கரும்பச்சை தமிழாய் கவிழ்ந்து கிடந்தன தேயிலைக் குன்றுகள்’ என புத்தக அட்டையில் இருந்த இந்த வரிகள் தான். ஏற்கனவே பி. எச். டேனியேல் எழுதிய எரியும் பனிக்காடு நாவலின் தாக்கம் இப்போது...

புலிக்குத்தி – விஜயராணி மீனாட்சி

திருக்கார்த்தியல் போல மனதிலிருந்து மறக்கமுடியாதது போலான யதார்த்த எழுத்துதான் இந்த நூலிலும் தொடர்ந்திருக்கிறது. ஒரு கதைசொல்லியின் நேர்த்தியோடு சொல்லப்பட்ட ஒன்பது கதைகள் இதில் உள்ளன. நூலாசிரியர் கதையில் மிகமிக எளிய மக்கள் உழைப்பால் சுரண்டப்படுவதையும் வஞ்சிக்கப்படுவதையும் தன் இயல்பான எழுத்துநடையால் புனைவுகளின்றிச் சொல்கிறார். பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும் இணையதளத்தில் வெளியான கதை. அத்தனை...

திருக்கார்த்தியல் – நவின் குமார்

  நம் வாழ்வில் அனைவரும் உழைப்பது எதற்காக என்று பலரிடம் கேட்டால் கூறுவார்கள் : “நான் நல்லா சாப்பிட தான் உழைக்கிறேன்”, “உழைச்சி சாப்பிட்ட காசுல ஒரு வேல கஞ்சியாச்சி குடிச்சா நிம்மதியா இருக்கும்”, என பலர் கூறுவர். ஆனால் நம் நாட்டில் உணவின்றி மக்கள் பலர் அவதிப்படுகின்றனர், அதில் குழந்தைகள் பலர் தெருக்களிலும், பெரிய இடங்களிலும், மக்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும் உணவு கேட்பதை...

தகவு இதழ் நேர்காணல்

படைப்பு இலக்கிய குழுமத்தின் ‘தகவு’ மின்னிதழில் வெளிவந்த என்னுடைய நேர்காணல். 1.ராஜவனம் எனும் நாவல் எழுதக் காரணமாக இருந்தது? இயற்கை சார்ந்த ரசனை தான் முக்கிய காரணம். அடிக்கடி காடு சார்ந்த இடங்களுக்கு பயணம் செல்வது ராஜவனம் எழுத ரொம்ப தூண்டுதலாக இருந்தது. வேறு எல்லா வாழ்க்கை முறையையும் நம்முடைய கற்பனையில் இருந்து நிறைய எழுத முடியும். ஆனால் காடு சார்ந்து அப்படி எழுத முடியாது.  காடு...

கடவுளின் தேசத்தில் 2 – ராஜேஸ்வரி லெஷ்மணன்

 ராம் தங்கம் அவர்கள், தனது கேரள பயணங்களை “கடவுளின் தேசத்தில்” என்று எழுதியதன் தொடர்ச்சி இப்புத்தகம். ஒரே புத்தகமாக வந்திருக்க வேண்டியதாம். எழுத நேரமின்மையால் இரண்டாவது பாகமாக வெளியிட்ட தொகுப்பு இது. தலச்சேரி, கோட்டயம்,  ஃபோர்ட் கொச்சி, மூணார் பயணங்கள் பற்றிய தொகுப்பு.  தலச்சேரி கேக் வகைகள் மற்றும் தம் பிரியாணிக்கு புகழ்பெற்ற ஊராம். அதுவும் பாரிஸ் ஹோட்டல் பிரியாணி மிகவும் பிரபலமாம். ...

ஊர் சுற்றிப் பறவை – சுகந்தி

 ராம் தங்கம் தான் பிறந்த மண்ணின் சிறப்பை  உலகிற்கு பறை சாற்றவே அருமையான நூலாக  கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க வைத்திருக்கிறார். புதிதாக பார்க்க நினைப்பவர்கள் இதை  வழிகாட்டியாக வைத்துக் கொண்டே சுற்றி விட்டு வரலாம். அந்த ஊரின் ஆளுமைகள் மறக்க முடியாத  சரித்திர புகழ் வாய்ந்த இடங்கள், கல்லறைகள், ஒரு பெரிய எழுத்தாளர்களின் அணிவகுப்பையே காணமுடிகிறது. அணைகள்,  புகழ் பெற்ற கோயில்கள் , ஆறுகள் பிரமிப்பையும்...

ராஜவனம் – கோடி

 “முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின் பரல் அவல் அடைய இரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்ப கருவி வானம் கதழ் உறை சிதறிகார் செய்தன்றே கவின் பெறு கானம்” (அகம். 4:1-7)  பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் என்ற நம் பெரும்பாட்டானின் கூற்று நம்மால் செயல்படுத்தபடுகிறதோ இல்லையோ காடுகளால்  நன்கு செயல்பட்டு வருகிறது. காடு...

ராஜவனம் – இந்து கணேஷ்

 ராஜ வனம் என்கிற இந்த தலைப்பே முதலில் என்னை ஈர்த்தது எனலாம். ஏனோ வனம் சார்ந்த புத்தகங்கள் எனக்கு மனதிற்கு நெருக்கமானவையாக ஆகி விடுகின்றன. நான் அதிகம் பயணிக்க முடியாத ஆனால் மிக விரும்பும் இடமாகவே வனம் இருந்து வருகிறது. கதை குமரி மாவட்ட வனத்திற்குள் நம்மை அழைத்து செல்கிறது. கோபால், ராஜேஷ் மற்றும் ஆன்றோவுடன் நானும் பயணித்தேன். திருநந்திக்கரை வழியாக மலை ஏற தொடங்கும் மூவரும் நந்தி ஆற்றின் மூலத்தை...