ராமன் என்கிற காந்திராமன்

Book Cover: ராமன் என்கிற காந்திராமன்

ராமன் என்கிற காந்திராமன்

Genres:
Excerpt:

கன்னியாகுமரி மாவட்ட விடுதலை/ சமூக வரலாற்றை எழுதுபவர்கள் காந்திராமனைப் புறக்கணிக்க முடியாது.  கடின உழைப்பு, படிப்பு, கள ஆய்வுச் சேகரிப்பு என்று தொடர்ந்த முயற்சியில் உருவாக்கப்பட்டது இந்நூல். காந்தி ராமனின் மொத்த வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வு கோவில் நுழைவுப் போராட்டத்தில் அவர் பங்கு கொண்டதுதான்.

READ MORE

அவருக்கு அப்போது பெரியாருடன் இருந்த நெருக்கம், பெரியாருக்குப் பாதுகாவலாக செயல்பட்டது என்பன போன்ற தகவல்களை பெரியாரைப் பற்றிய நூல்களில் பெரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை. ராம் பதிவு செய்திருக்கிறார்.

இந்திய விடுதலையின் ஒரு பகுதியாகச் செயல்பட்ட மதுவிலக்கு, உப்பு சத்தியாகிரகம் போன்றவற்றில் காந்திராமன் பங்குகொண்ட செயல்களை ராம் இயல்பாக எழுதியிருக்கிறார். 1905ல் பிறந்து 1960ல்  இறந்த காந்திராமன் 55 ஆண்டுகள் தாம் வாழ்ந்திருக்கிறார். இதற்குள் எத்தனை செயல்பாடுகள், தியாகங்கள். எல்லாவற்றையும் ராம் சுருக்கமாகப் பதிவு செய்து விட்டார்.
அ.கா. பெருமாள்
COLLAPSE

About the author

admin@admin.com

Add comment