தமிழில் மட்டும் தான் பயண இலக்கியங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. பல மொழிகளில் பயணங்கள் பற்றிய புத்தகங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நானும் என்னுடைய கேரள பயணங்களை 'கடவுளின் தேசத்தில்' என்று எழுதிக் கொண்டிருக்கிறேன். 'கடவுளின் தேசத்தில்' முதல் பாகம் எழுதும் போது இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளையும் சேர்த்து எழுதி இருக்க வேண்டும். வெவ்வேறு பணிகள் காரணமாக எழுத முடியாமல் போய் விட்டது. இப்போது அதற்கான வாய்ப்புகள் உருவானதும் எழுதி விட்டேன். அவற்றை 'கடவுளின் தேசத்தில்' இரண்டாம் பாகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்கனவே முதல் பாகத்திற்கு அதிக அளவு வரவேற்பும் வாசகர்களின் மதிப்புரைகளும் இருந்தது. அதுதான் தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமாகவும் அமைந்தது. இந்தப் புத்தகத்தில் தலச்சேரி, கோட்டயம், ஃபோர்ட் கொச்சின், மூணார் பயண அனுபவங்கள் பற்றி எழுதி இருக்கிறேன்.