அண்ணன் ராம் தங்கம் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்
தங்களின் திருக்கார்த்தியல் நூல் கடந்த வாரம் கிடைத்தது. நேரம் கிடைக்கும் போது ஒருவழியாக வாசித்து முடித்தேன்.
நாஞ்சில் நாட்டுக் கதைகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. திருக்கார்த்தியல் தொடங்கி கடந்து போகும் வரை பதினொரு கதைகளும் கண்களை கசிய வைத்தன. குருதியெழும்பி நரம்புகளை புடைக்க வைத்தன. நல்ல சிறுகதை நூலை வாசித்து முடித்த மனநிறைவைத் தந்தது.
மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் சாகித்திய அகாதமி யுவபுரஸ்கார் விருதாளர் அண்ணன் ராம் தங்கத்தை.
பிரியமுடன்
அய்யனார் ஈடாடி
மதுரை.