ராஜவனம்- மதிப்புரை-ஜெயஸ்ரீ கடலூர்

ராஜவனம் நாவல் அருமை. வனத்துக்குள் வாழ்ந்து விட்டு வந்த உணர்வு.
ராஜசேகர் என்ற அன்பான மனிதரின் பெயர் கொண்டு ராஜவனம் என்றானது தலைப்பு எனப் புரிந்தது. மனிதர்கள், விலங்குகள் என அனைவரிடமும் அன்பாகவே இருக்கும் ராஜசேகர் போன்றவர்கள் தெய்வப் பிறவிகள். நாவல் ஆரம்பத்தில் பொறுமையாக காட்டிற்குள் கைப் பிடித்து அழைத்துச் செல்கிறது. அதன் பிறகு த்ரல்லிங் ஆகிறது. பிறகு காணி மக்கள் வாழ்க்கை முறை, அவர்கள் அன்பு என நெகிழ வைக்கிறது.
கோபாலும் புலியும் சந்திக்கும் இடம் திக் திக். அந்தப் புலி எப்படி கொல்லாமல் விட்டது என ஓர் ஆச்சர்யம். அதன் விடையை நாவலின் இறுதியில் கண்டது ஆனந்தம்.  வன விலங்குகளைக் கொல்லவும்,அவற்றையும் வன வளங்களையும்  கடத்தும் மனிதர்கள் எவ்வளவு தரம்  தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள்?.  இந்த அழகான முரணை மிக அழகாகக் காட்டியிருக்கும் நாவலாசிரியர் பாராட்டுக்குரியவர். இன்னும் கூட பெரிய நாவலாக உருப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாவல் படித்து முடித்த போது ஒரு குறும்படம் பார்த்த நிறைவு . ராம் தங்கம் பாராட்டுக்குரியவர்.
 வாழ்த்துகள் ராம்.
-ஜெயஸ்ரீ கடலூர்

About the author

ramthangam

Add comment

By ramthangam