ஊர் சுற்றிப் பறவை – வீரசோழன் க. சோ. திருமாவளவன்

எழுத்தாளர் ராம் தங்கம் சொல்லும் கதை பாணியே எப்போதும் தனித்துவம்தான்.
அவரின் திருக்கார்த்தியல் கதை படித்து விட்டு பல நேரங்கள் உறக்கமே இல்லாமல் இருந்திருக்கிறேன். அவரின் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு ரகம். தனித்தன்மையோடு மிளிரும். அவ்வளவு சீக்கிரம் சமரசமே இல்லாமல் எழுத்தை அற்புதம் செய்யும் வசீகரன். ஆனால் அவரின் மற்ற புத்தகத்தை விட இதில் கதை சொல்லும் பாணியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட புத்தகமாக தந்திருக்கிறார்.

“ஊர் சுற்றிப் பறவை”.
குமரி மாவட்டம் என்றாலே வள்ளுவனும், விவேகானந்தர் பாறையும், திரிவேணி சங்கமும் தானே. அதற்கு ஒரு புத்தகமா? அப்படி நினைத்ததற்கு மாறாக ஒரு புத்தகம். இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும் கூட இந்த ஊர் சுற்றிப் பறவையை ஒரு மென்பொருளால் நகலெடுக்க முடியாது என்று இந்த நூல் பற்றி பதிப்பாசிரியர் ஒரு கருத்தை முன் வைக்கிறார்.

குமரி மாவட்டம் இதற்கு முன் தென் திருவிதாங்கூர் என அழைக்கப்பட்டது. பெருந்தலைவர் காமராசர் பாராளுமன்றத்திற்கு எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தோவாளை பூக்கள் புகழ் பெற்றது. பூக்களுக்கான மார்க்கெட் தோவாளை. சுதந்திரத்திற்கு பின்னும் அடிமைபட்டுக் கிடந்தது . பல போராட்டங்கள் நடந்தது. நான்கு தாலுகா இணைந்தது அன்றைய கன்னியாகுமரி மாவட்டமாக இருந்தது.1. கல்குளம்2. விளவங்கோடு3. அகஸ்தீஸ்வரம்4. தோவாளை.

இரணியல் அரண்மனை சேரனின் செல்லக்கொட்டாரம். டச்சுப் படைத்தளபதி டிலெனெய் இங்கேயே தங்கி விட்டதால் அவரை தேசத்துரோகி பட்டம் கொடுத்து அவமானப்படுத்தி உள்ளது. அகிலத்திரட்டு அம்மானை எனும் நூலில் 152 மைல்கள், 16008 வீதிகள் எனக் குறிப்பு உள்ளது. மாயன் காலண்டர் தயாரித்த மாயன் வாழ்த்த ஊர். தூத்தூரில் வாழும் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் சூரர்கள். தக்கலை பீர்முகம்மது, கோட்டாறு ஷேக் மதீனா சாஹிப் போன்ற ஞானிகள் வாழ்ந்த மண்.

1990 ம் வருடம் காற்றாலை சாம்ராஜ்யம் தொடங்கி உள்ளது. தினசரி 600 யூனிட் மின்சாரமும் கிடைக்குது. ஒரு காற்றாலை 4.5 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வல்லமை கொண்டது.
திருப்பதிசாரம் நம்மாழ்வார் தாயின் ஊர். இங்கு திருவாழ்மார்பன் கோயில் உள்ளது. நாகர்கோயில் மத்தியில் உள்ள மணிக்கூண்டு 1893 வது வருசம் திருவிதாங்கூர் ராமவர்மா மகாராஜாவால் கட்டப்பட்டது. கேட்டவரம் தரும் கோட்டாறு புனித சவேரியர் பேராலயம் உள்ளது.
சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இணைந்து பக்தர்களுக்கு தாணு மலையனாக காட்சி தருகிறார்.

தீண்டாமை கடைப்பிடிப்பதை குமரன் ஆசான் மூலம் திருவிதாங்கூர் அரசவையின் 12 வது கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. 1926 ஜனவரி 19 கோவிலுக்குள் நுழையும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஈவெரா கலந்து கொண்டுள்ளார். மனித நேயத்துக்கும் மத நல்லிணகத்திற்கும் எடுத்துக்காட்டாக பள்ளியாடி பழைய பள்ளித் தலம்.  பள்ளியாடி மார்ஷல் நேசமணி பிறந்த ஊர். இப்படி நிறைய தகவல்களுடன் புத்தகத்தை சோர்வே இல்லாமல் வாசிக்கத் தூண்டுகிறார்.

எழுத்தாளர் ராம் தங்கம் கதை சொல்கையில் அல்லது அவர் எழுத்தோடு பயணம் செய்கையில் 1000 கி.மீ பயணம் செய்த திருப்தியும், புது உத்வேகமும் கிடைக்கும். அப்படித்தான் இந்த புத்தகமும்.

– வீரசோழன் க.சோ. திருமாவளவன்

About the author

ramthangam

Add comment

By ramthangam