கன்னியாகுமரி நிலப்பரப்பிற்குத் தொன்றுதொட்ட வரலாற்றுத் தொடர்பு உண்டு. அதனுடைய
நீட்சிகள் எச்சங்கள் இன்று வரை இருந்து கொண்டே இருக்கின்றன. வரலாறு மட்டுமில்லாது
ஆன்மீகமும் கன்னியாகுமரி நிலப்பரப்பில் புராணக் கதைகளோடு இணைந்து பேசப்பட்டு
வருகிறது.
இந்தப் புத்தகம் குமரி மாவட்டத்தின் அதிகம் அறியப்படாத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான கோயில்கள் குறித்துப் பேசுகிறது. தமிழகத்தில் இந்திரன் தனிக் கோயில் கிடையாது. கன்னியாகுமரியில் மட்டும் இந்திரனுக்கான தனிக்கோயில் இருக்கிறது.
இங்கிருந்துதான் இந்திரன், மும்மூர்த்திகளை வழிபடச் சென்று சாப விமோசனம் பெற்றார் என்று புராணக் கதை உண்டு. அந்த இந்திரன் கோயில் குறித்த அரிய தகவல்களை இந்த நூல்
சொல்கிறது. குமரி மாவட்டத்தில் அவ்வையார் வழிபாடு, 1008 சங்கு அபிஷேகம் நடைபெறும்
குகநாதீஸ்வர் திருக்கோயில், வேதம் கற்பித்த துவாரகை கிருஷ்ணன் கோயில், ஆயிரம்
ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான சிதறால் குடைவரைக்கோயில் ஆகியவை குறித்து புதிய தகவல்களைத் தரும் கட்டுரைகள், அவற்றின் வரலாற்றுப் பின்னணியோடு எழுதப்பட்டுள்ளது.
சுவாரசியமான நடையில் ஒரு சரித்திரப் பயணம்.