ஆண்டுதோறும் நாமக்கல் பாவை கல்வி நிறுவனங்கள் ஆன்றோர் முற்றம் என்கிற நிகழ்வை ஏற்பாடு செய்து தமிழ்மண் சார்ந்த மிகச் சிறந்த ஆளுமைளை தேர்ந்தெடுத்து ‘தமிழ் இலக்கியச் செம்மல்’ விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 2024ஆம் ஆண்டிற்கான சிறுகதை பிரிவில் ராம் தங்கத்திற்கு ‘தமிழ் இலக்கியச் செம்மல்’ விருது 30-11-2024 அன்று நாமக்கல் பாவை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன், பாவை நடராஜன் ஆகியோரால் வழங்கப்பட்டது.