சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் நடத்திய 2020ஆம் ஆண்டிற்கான குறுநாவல் போட்டியில் ராம் தங்கத்தின் ‘ராஜவனம்’ குறுநாவல் முதல் பரிசு பெற்றது. போட்டியின் நடுவராக இருந்து தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்க்.
ஆண்டுதோறும் நாமக்கல் பாவை கல்வி நிறுவனங்கள் ஆன்றோர் முற்றம் என்கிற நிகழ்வை ஏற்பாடு செய்து தமிழ்மண் சார்ந்த மிகச் சிறந்த ஆளுமைளை தேர்ந்தெடுத்து ‘தமிழ் இலக்கியச் செம்மல்’ விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 2024ஆம் ஆண்டிற்கான சிறுகதை பிரிவில் ராம் தங்கத்திற்கு ‘தமிழ் இலக்கியச் செம்மல்’ விருது 30-11-2024 அன்று நாமக்கல் பாவை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழறிஞர் கு.வெ...
படைப்பு குழுமத்தின் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த நாவலுக்கான விருதை ‘வாரணம்’ புத்தகம் பெற்றது. படைப்பு இலக்கிய விருதை சென்னையில் நடந்த விழாவில் எழுத்தாளர்கள் ஜோ டி குருஸ், இந்திரன் படைப்பு இலக்கிய குழுமத்தின் ஜின்னா ஆகியோர் வழங்கினார்கள்.
தமிழ்ச் சிறுகதை தற்போது பல்வேறு உடைவுகளைச் சந்தித்திருக்கிறது. மனிதர்களின் அக நெருக்கடிகளுக்குப் பின்னே மறைந்திருக்கும் நவீன வாழ்க்கை குறித்த போதாமைகளும் தனிமைத் துயரங்களும் இரண்டாயிரத்திற்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைகளில் காத்திரமாக எதிரொலித்தன. நவீன கோட்பாடுகளின்மீது நம்பிக்கையிழந்த பலர் மீண்டும் யதார்த்தவாதத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். இதில் ராம் தங்கமும் ஒருவர். சிறுகதை, நாவல்...
வனம் என்பது எப்பொழுதுமே என் காதலுக்குறிய இடம்.பெயருக்கேற்றார் போல ராஜவனம் மிகவும் பிரமிப்பை உள்ளடக்கிய அடர்ந்த நாவல். வெறும் 80 பக்கங்களில், விலங்குகள் பறவைகள் தாவரங்களை பற்றிய ஆழ்ந்தறிந்த தகவல்கள் ஏறாளம். ஆசிரியரின் வனத்தை பற்றிய புரிதலும் அன்பும் இதனூடே நன்று தெரிகிறது. பழங்குடி மக்களின் வாழ்வியல் மருத்துவம் மற்றும் சடங்கு முறைகள் மூலம் நாம் தொலைத்தஇந்த ராஜவனத்தின் ரட்சகனான”ஆன ராஜேந்திரன்...