திருச்சி மணப்பாறை சௌமா கல்விக் குழுமம் ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கி எழுத்தாளர்களை கௌரவம் செய்து வருகிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருது ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. இதனை எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் மணப்பாறையில் நடைபெற்ற விழாவில் ராம் தங்கத்திற்கு வழங்கினார்.