உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை வழங்கும் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான சுஜாதா விருது ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் தொகுப்புக்கு வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மனைவி திருமதி சுஜாதா அவர்களும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களும் விருதினை வழங்கினார்கள்.