கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வரலாற்று நூலுக்கான ‘தெற்கு விருது’ ராம் எழுதிய காந்திராமன் புத்தகத்திற்கு 8-4-2016 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
தமிழ்ச் சிறுகதை தற்போது பல்வேறு உடைவுகளைச் சந்தித்திருக்கிறது. மனிதர்களின் அக நெருக்கடிகளுக்குப் பின்னே மறைந்திருக்கும் நவீன வாழ்க்கை குறித்த போதாமைகளும் தனிமைத் துயரங்களும் இரண்டாயிரத்திற்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைகளில் காத்திரமாக எதிரொலித்தன. நவீன கோட்பாடுகளின்மீது நம்பிக்கையிழந்த பலர் மீண்டும் யதார்த்தவாதத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். இதில் ராம் தங்கமும் ஒருவர். சிறுகதை, நாவல்...
வனம் என்பது எப்பொழுதுமே என் காதலுக்குறிய இடம்.பெயருக்கேற்றார் போல ராஜவனம் மிகவும் பிரமிப்பை உள்ளடக்கிய அடர்ந்த நாவல். வெறும் 80 பக்கங்களில், விலங்குகள் பறவைகள் தாவரங்களை பற்றிய ஆழ்ந்தறிந்த தகவல்கள் ஏறாளம். ஆசிரியரின் வனத்தை பற்றிய புரிதலும் அன்பும் இதனூடே நன்று தெரிகிறது. பழங்குடி மக்களின் வாழ்வியல் மருத்துவம் மற்றும் சடங்கு முறைகள் மூலம் நாம் தொலைத்தஇந்த ராஜவனத்தின் ரட்சகனான”ஆன ராஜேந்திரன்...
மூன்று இளைஞர்கள் ஆறு உருவாகி வரும் மூலத்தை அறிய வெகு நாட்களாக ப்ளான் செய்து முடியாமல் போக, கடைசியாக ஒரு நாள் முடிவு செய்து நதிமூலத்தை அறியும் ஆவலுடன் காட்டில் ஏறி மலை உச்சியை நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்யும் மூவரில் ஒருவனின் பெயர் கோபால். அவனின் தந்தை வனத்துறை அதிகாரியாக அதே மலைக் காடுகளில் பணி புரிந்தவர். அவர் அந்த காடுகளைப் பற்றியும் அங்கு வாழும் மிருகங்கள், வன தேவதைகள்...
இந்த ராஜவனம் ஒரு இனிமையானகாட்டுக்குள் ஒரு குளுமையான பயணம் செய்து தருணமாக இருந்தது. “ஊர் சுற்றிப் பறவை” வாகனத்தில் அந்த நகரை சுற்றி காட்டிய மனுஷன் இதில் இந்த காட்டையும் நதியின் மூலத்தையும் தேடிச் சென்ற மூன்று நண்பர்களை பற்றியும் சொல்கிறார் ஆசிரியர். இந்தப் பயணம் அந்த காட்டில் ஒருமுறை சென்று வந்த உணர்வை நமக்குள் தந்துவிடும் அதை யாரும் மறுக்க முடியாது. கோபால் ஆன்றோ ராஜேஷ் இந்த மூன்று நண்பர்களும்...