ஏற்கனவே திருக்கார்த்தியல் என்ற காத்திரமானதொரு சிறுகதைத் தொகுப்பின் மூலம், தமிழலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்ட ராம் தங்கம், தற்போது ராஜவனம் என்ற ஒரு குறுநாவலின் மூலம் தன்னை இன்னும் இறுக்கமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
வனம், வனம் சார்ந்தச் சூழல், மனிதனுக்கு எப்போதும் அள்ளித்தரும் இயற்கையின் நினைக்கு அரசதிகாரம் என்ற புள்ளிக்கும் தன் ராஜவனத்தை ராம்தங்கம் ஸ்தாபிக்கிறார். எத்தனை தாவரங்கள்? எத்தனைப் பறவைகள்? எத்தனை விலங்குகள்? அந்த கொம்பன் யானை என மனிதன் இழந்து நிற்கும் காட்டின் வாசனையை வாசகனுக்குக் கடத்துகிறார்.
ராஜசேகர் என்ற ஒரு வனக்காவலரின் நேர்மையான நமக்கான பற்றுக்கொடி இன்னுமும் ராஜசேகர்களால் தான் வனத்தில் மழைப் பெய்கிறது. மரங்கள் செழித்து வளர்கின்றன. ஆனால் ராஜசேகர்கள் அரசு அதிகாரத்தால் லாரி ஏற்றி நசுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
மிக இயல்பாக கதை சொல்லத் தெரிந்திருக்கிறது ராம் தங்கத்திற்கு, நாஞ்சில் மொழி மிக இயல்பாக அவருக்குத் கைக்கூடி வருகிறது இவருக்கு. ராஜவனம் ராம்தங்கத்தின் நவீன படைப்பின் சாத்தியத்திற்கான துவக்கம். அவர் நாஞ்சில்நாட்டின் காடுகளைப் பற்றி இன்னும் விரிவானதொரு நாவலை எழுதிவிடக்கூடும் என நம்பி, என் தம்பியை ஆரத்தழுவி அணைத்துக் கொள்கிறேன்.
– பவா செல்லதுரை
ராஜவனம்
வம்சி புக்ஸ்