ராஜவனம் கதை காட்டிற்குள் ஒரு சிறு பயணத்திற்க்கு நம்மை கூட்டிசெல்கிறது. கோபால்,ராஜேஷ் , ஆன்றோ ஆகிய முன்று நபர்களின் வழியாக கதை தொடங்குகிறது. முகளியடி மலையின் உச்சியைக்காணவும், நந்தியாற்றின் மூலத்தை பார்க்கவும் பயணம் செய்யும் இவர்களின் பார்வையில் இருந்துகாட்டினை குறித்தான தகவல்களைச் சொல்லியுள்ளார் எழுத்தாளர்.
சூரியஒளி தரை தொட சிரமப்படும் நீண்ட உயர மரங்களின் வழியாக நடக்கும் பொழுதில், அவர்களுக்குள்ளாக நடக்கும் உரையாடல்கள் காடுகள் மீதான சந்தேகம் , அதற்கு பதில் என்ற வகையிலே அமைகிறது. பசுமையான மரங்களும் கீச் கீச்பறவைகளும் இசை பாடும் மூங்கில்களும் அவர்களுக்கு, இலக்கை நோக்கி நடக்க உற்சாகப்படுத்துவதாக உள்ளது.
காணி பழங்குடியின மக்களின் பழக்கவழக்கம், நாகரிகம், உடை, உணவு , உறைவிடம் எனஅனைத்தையும் மாறுப்பட்டவை. அதை விவரிக்கும் பொறுப்பில், எழுத்தாளர் சிறுதும் பிசுங்காமல்தெளிவாக எழுதியுள்ளார். இப்படியாக தொடரும் கதையில், முடிவில் நந்தியாறும், முகளியடி மலையும்எவ்வாறு முடிக்கப்படுகிறது என்பதை தவறாமல் புத்தகத்தை படித்துத் தெரிந்துக்கொள்ளவும்.
கோபாலின் தந்தை கதாபாத்திரமாக வரும் ராஜசேகர் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். அதே நேரம் நேர்மையாளர்களை இச்சமூகம் வாழவிடாவிட்டாலும், எளியவர்களின் உள்ளங்களில் அவர்கள் என்றைக்கும் அணையா தீபமாய் சுடர்விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதையும் காலம்உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறது.
– திவ்யா கணேசன்