மூன்று இளைஞர்கள் ஆறு உருவாகி வரும் மூலத்தை அறிய வெகு நாட்களாக ப்ளான் செய்து முடியாமல் போக, கடைசியாக ஒரு நாள் முடிவு செய்து நதிமூலத்தை அறியும் ஆவலுடன் காட்டில் ஏறி மலை உச்சியை நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.
அப்படி பயணம் செய்யும் மூவரில் ஒருவனின் பெயர் கோபால். அவனின் தந்தை வனத்துறை அதிகாரியாக அதே மலைக் காடுகளில் பணி புரிந்தவர். அவர் அந்த காடுகளைப் பற்றியும் அங்கு வாழும் மிருகங்கள், வன தேவதைகள், பழங்குடி மக்கள் என நிறைய விஷயங்களை தன் மகனோடு முன்னமே பகிர்ந்து இருந்ததால் கோபாலுக்கு மற்ற மூவரைக் காட்டிலும் இந்த பயணத்தில் அளவற்ற மகிழ்ச்சி.
இது ஒரு குறுநாவல், பயணம் ஆரம்பிக்க காட்டில் அடி வைத்ததில் இருந்து காட்சிகளை வர்ணனை மூலம் விலக்குவது அழகாக இருந்தது. காட்டில் பாதி தூரம் இளைஞர்கள் கடந்த பிறகு கோபாலின் தந்தை ராஜசேகரைப் பற்றிய கதை தொடரும்.
ராஜசேகர் எப்படி காட்டில் தன் பணியைச் செய்தார், மிருகங்களுக்கு எவ்வளவு உதவி செய்தார், பழங்குடி மக்களுக்கு என்னென்ன செய்தார், அரசாங்கத்தை எதிர்த்து எப்படி மரம் வெட்டுவதை, விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க முயன்றார் போன்றவை படிக்கும் பக்கங்கள் புரட்டுவதை மறக்கச் செய்கிறது.
கடைசியில் மூவரில் கோபால் மட்டும் பயணத்தில் பிரிந்து சென்று பழங்குடி மக்களிடம் தஞ்சம் புகுந்து இறந்த தன் தந்தையின் கதையை அவர்கள் வாயினால் கேட்டுவிட்டு நதி மூலைத்தைக் காண்பதோடு கதை முடிவது தான் கதையின் மூலம்.
ஆனால் ஆசிரியர் அதனை காடோடும் இயற்கையோடும் மிருகங்களோடும் பழங்குடிகளாடும் நம்மை அழைத்துச் சென்று இருப்பார். அதிலும் பழங்குடி மக்களின் வழக்கு மொழியிலேயே வார்த்தைகள் இருக்கும். வேகமாக அதே ஸ்லாங்கில் படித்துக் கடந்தால் நன்று. நிறுத்தி பொறாமையாக அந்த இடங்களில் படித்தால் கதையின் ஓட்டம் தடை படும்.
இன்னும் காட்டைப் பற்றி அறிய கதை நீளாதா என்ற ஏக்கமே! முடிக்கும் போது.