இந்த ராஜவனம் ஒரு இனிமையானகாட்டுக்குள் ஒரு குளுமையான பயணம் செய்து தருணமாக இருந்தது. “ஊர் சுற்றிப் பறவை” வாகனத்தில் அந்த நகரை சுற்றி காட்டிய மனுஷன் இதில் இந்த காட்டையும் நதியின் மூலத்தையும் தேடிச் சென்ற மூன்று நண்பர்களை பற்றியும் சொல்கிறார் ஆசிரியர். இந்தப் பயணம் அந்த காட்டில் ஒருமுறை சென்று வந்த உணர்வை நமக்குள் தந்துவிடும் அதை யாரும் மறுக்க முடியாது.
கோபால் ஆன்றோ ராஜேஷ் இந்த மூன்று நண்பர்களும் நதியின் மூலத்தை அறிய வேண்டும் என்று எண்ணத்தில் எப்படியாவது போக வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருக்கின்றனர் அதற்கான நாள் அமைகிறது மூன்று பேரும் பல தற்காப்பு பொருட்களை எடுத்துக்கொண்டு தனது பயணத்தை தொடங்குகின்றனர். காட்டிற்குள் காலடி எடுத்து வைக்கின்றனர் அந்த காட்டில் நுழையும் போதே அவர்கள் பார்க்கும் நிகழ்வுகளை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார் ஆசிரியர் அந்த சூழ்நிலை மனதில் அப்படியே படிந்து விடுகிறது மிகச் சிறப்பான இயற்கை குறுநாவல் இது.
கோபாலின் தந்தை வன காவலர்களாக இருந்தவர் என்றும் அவர் ஏற்கனவே இங்கு தென்படும் அனைத்தையும் முன்பே கோபாலிடம் சொல்லியிருக்கிறார் அதைக் கேட்டு வளர்ந்த கோபால் இடங்களை அறிந்தது போல் உணர்வுடன் கிளம்பி வருகிறான் வரும் வழியில் நடக்கும் நிகழ்வு அவன் தந்தையின் கதை இப்படி நகர்கிறது நாவல். அவர்கள் பார்க்கும் யானைகள் குரங்குகள் என்று எல்லாவற்றையும் பற்றியும் அறிகிறார்கள் இந்த காட்டின் பயணம் என்பது ஒரு உணர்வாக இயற்கையோடு சேர்ந்து பயணித்த மகிழ்வை தருகிறது.
இந்தக் காட்டின் உள்ளே சென்று அறிந்திருந்தால் மட்டுமே இந்த குளுமையான நாவலை வடித்து இருக்க முடியும் ஆசிரியர் இந்த காடுகளை பல நாட்கள் சென்று ஆராய்ந்து எழுதி இருப்பார் அப்படியான உணர்வைதான் தருகிறது நமக்கு. இயற்கையோடு ஒரு நாவல் காடோடிக்குப் பிறகு இந்த நாவல் என்று தோன்றியது எனக்கு இதில் ஒரு வித குளுமையான உணர்வு வாசிக்கும் போது எனக்குள் ஏற்பட்டது கண்டிப்பாக எல்லோரும் இந்த இயற்கை நாவலை வாசிக்கவும் அற்புதமான குறு நாவல் கையில் எடுத்தால் முடித்துவிட்டு தான் வைக்க முடியும் அப்படிப்பட்ட நாவல்களில் எதுவும் ஒன்று அருமையான நாவல்.
இந்த நாவலில் வரும் ராஜசேகர் அவர்கள் கதை வருவது இந்த அளவு ஒருவர் காட்டை வனவிலங்கையும் நேசிப்பது படிக்கவே பரவசமாக உள்ளது. அவருடைய செயல்கள் யாராக இருந்தாலும் இந்த காடு தான் நமக்கு நமக்கான சாமி என்று அவருடைய ஒற்றை குரலில் அனைவரின் குரலாக தெறிக்க விடுகிறார் அமைச்சர் என்று கூட பார்க்காத பேச்சாக இருக்கட்டும் நீதிபதியானாலும் சரி என்று யாராக இருக்கட்டும் தவறு தவறு தான். அவரின் கதை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
கோபாலை புலி வந்து பின்னால் இருப்பதும் அதன் குட்டிகள் அவனை சுற்றி வருவதும் வாசிக்கும் போது நம்மை அறியாமலே நமக்குள் எதுவும் நடந்து விடுமோ என்று யோசிக்க வைக்கிறது அற்புதமான அந்த இடத்தில் பரபரப்பை உண்டாக்கி விடுகிறார் ஆசிரியர். யானைக்கு அடிபட்டதும் அதற்கு வைத்தியம் பார்த்து இரண்டு நாட்கள் கூடவே வைத்திருப்பது தனது தாயிடம் அதை சேர்ப்பது என்று பல இடங்களில் காடை நேசிக்கும் மனிதனாலும் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும் என்று சொல்லும் அளவுக்கு சிந்தித்து இந்த காட்டின் உள்ளே வாழ்ந்து விட்டார் ஆசிரியர் இதை தழுவி தான் வாரணம் நாவல் என்று சொல்லியதில் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் காட்டுக்குள் வலம் வரலாம் இன்னும் நிறைய செய்திகளை அறிந்து கொள்ளலாம் என்று எண்ணம் வந்தது நல்லதொரு குறுநாவலை வாசித்த மகிழ்ச்சி மனதில் என்றுமே உள்ளது இதை வாசித்தவுடன்.