திருக்கார்த்தியல், ராம் தங்கம் எழுதிய சிறுகதை தொகுப்பு – நரோயில் வட்டார வழக்கு மொழியுடன் கனத்த கதைகளை தாங்கி நிற்கின்றது. நல்ல உணவுக்காக ஏங்கும் பால்ய வயது பிள்ளைகளின் மனநிலையை உணர்த்தும் செந்தமிழ், சிவா, லிங்கம், கார்த்திக், வினோத் போன்றோரை தாங்கி நிற்கும் பாட்டிகள் ( அவர்களும் அதே நிலையில் உள்ளவர்கள் தான்) இந்தக் கதைகளையும் தாங்கி நிற்கிறார்கள்.
முற்பகல் செய்யின், பெரியநாடார் வீடு போன்ற கதைகளில், நாஞ்சில் நாட்டு நாட்டார் தெய்வம் சார்ந்த புனைவு கதைகள், ஊரில் கேட்டு வளர்ந்த கதைகளை நினைவூட்டியது. மனம் கணக்க வைக்கும் எதார்த்த பாத்திரங்கள் சுமதியும் பானியும்..
கதைகள் முழுதும் தேரூர், ஒழுகினசேரி, சுசீந்திரம், வள்ளியூர், குலசேகரப் பாண்டியனூர், நாறும்பூநாதனூர், தக்கலை என நாகர்கோவிலின் காட்சிகள் எழுத்தாக விரிகிறது. மாறுபட்ட கதைக்களங்களை கொண்டு இந்தக் கதைகளில், விளிம்பு நிலை மக்களின் அன்றாட வாழ்வில் நிகழ்ந்த காட்சிகளின் பின்புலமே கதைகளின் வேராக இருக்கின்றன..
Sankar.T.A.B,
Ahmedabad.