திருக்கார்த்தியல் – நவின் குமார்

  நம் வாழ்வில் அனைவரும் உழைப்பது எதற்காக என்று பலரிடம் கேட்டால் கூறுவார்கள் : “நான் நல்லா சாப்பிட தான் உழைக்கிறேன்”, “உழைச்சி சாப்பிட்ட காசுல ஒரு வேல கஞ்சியாச்சி குடிச்சா நிம்மதியா இருக்கும்”, என பலர் கூறுவர். ஆனால் நம் நாட்டில் உணவின்றி மக்கள் பலர் அவதிப்படுகின்றனர், அதில் குழந்தைகள் பலர் தெருக்களிலும், பெரிய இடங்களிலும், மக்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும் உணவு கேட்பதை நாம் பார்த்துள்ளோம்.
 இந்த சிறுகதை தொகுப்பில் வரும் கதை அனைத்தும் என் மனதில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியது. விடுதியில் தங்கி இருக்கும் அந்த எழை சிறுவனின் பசி, அதனால் அவனுக்கு ஏற்படும் சூழல் அந்த திருக்கார்த்தியல் நாளில் அவனுக்கு மனதளவில் ஏற்பட்ட வலி அவனின் சோகம் அகியவற்றை கூறும் கதை “திருக்கார்த்தியல்”.
அதே போல் ஒவ்வொரு கதையும் மக்கள் பசியால் என்ன என்ன நிலைக்கு செல்கிறார்கள் என்பதை விவரிப்பதாக அமைந்துள்ளது. இந்த சிறுகதை தொகுப்பில் வரும் சிறுவர்களின் வறுமை அவர்களின் மனநிலை ,கதை போகும் களம் அகியவை என்னை மிகவும் ஈத்தது.
  சாதியின் பெயரால்  ஒரு மாணவனின் படிப்பு பாதிப்பு பற்றியும்,அதில் உள்ள கருத்தையும் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பள்ளியில் கற்று கொடுத்தாலும், சாதி சான்றிதழ் இன்றி ஒரு பள்ளியும் சேர்ப்பதில்லை, சாதியின் பெயரால் அவனின் படிப்புக்கு எற்படும் பாதிப்பை கூறும் கதை “உடற்றும் பசி”.
  ஒரு பெண் அவளின்  வாழ்க்கை துணையாளன் கொடுத்த நம்பிக்கை பொய்யானதால் எவ்வாறு அவளது வாழ்க்கை சீரழிந்து போன பின் “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு”என்பது போல தன் மகனுக்கான வாழ்வை வாழ்ந்து பெண்ணின் வாழ்வை கூறும் கதை”ஊழிற் பெருவலி”.
  குடும்பத்தின் பிரச்சனையும், தோற்றத்தை கண்டு பலர் பெண் தரவில்லை அதனால் குடும்பத்திலும், மனதளவி்லும் அந்த நபருக்கு எற்படும் வலியும் கூறும்  கதை “விரிசல்”.
“பெரிய நாடாரின் வீடு” என்ற சிறுகதை  அவரின் வாழ்க்கையையும், அவர்  வீட்டு தோற்றத்தையும், இருவகைப்பட்ட  திருடர்கள் வகையும் கூறுகிறது. மாணவர்களுக்கு படிப்பின் முக்கியத்தை கூறும் கதை “காணி வாத்தியார்”கதை.
  என் மனத்திற்க்கு மிகவும் பிடித்த கதை “பானி”, மனநலம் பாத்திக்கபட்டவன் என்று ஊரில் பல  பேர் அவனை  வெறுப்புடன் பார்பதும்,சுரேஷ் அவனின் அன்பால் பானியை அரவணைப்பதும். சுரேஷ் குடும்பத்தில் பானி ஒரு உறவு போல் இருந்தான். உண்மையில் அவனின் குணம், அவரின் பொறுப்புணர்வு அனைத்தும் கதையில் படிக்கும் போதே அழுதுவிட்டேன்.
 ‌ பொதுவாக எழுத்தாளர் ராம் தங்கம், அவரின் சிறுகதை தொகுப்பு “திருக்கார்த்தியல்” குமரி மாவட்டமொழிநடை கொண்டே இருக்கிறது. நானும் குமரி மாவட்டத்தை சார்ந்தவன், அதனால் ஊரின் சிறப்பையும், நிறைய இடங்களை பற்றி தகவல்களையும் அறிந்தேன், மொழி நடை மிகவும் பிடித்து போய் இருந்தது. அனைத்தை கதைகளும் ஒவ்வொரு தளத்தை மையமாக வைத்து சென்றது. “திருக்கார்த்தியல்” அனைவராலும் படிக்க வேண்டிய புத்தகம் என நான் கருதுகிறேன்.
இர,நவின் குமார்

About the author

ramthangam

Add comment

By ramthangam