கடவுளின் தேசத்தில்-மதிப்புரை-ராஜேந்திரன் வெங்கடேசன்

தான் சென்ற பயணத்தின் மூலம் பெற்ற அனுபவம் மற்றும் அந்த இடங்களில் உள்ள சிறப்பினை ஒவ்வொரு ஊரின் தலைப்பிலும் தொகுத்திருக்கிறார். மறையூர் முனியறைகள், வைக்கம்,  வாகமன்,  கீழ் கோதையாறு, அடிமாலி, தோட்டமலை, திருவனந்தபுரம் பயணம், மாஹி ரயில் பயணம்,  மாஹி என ஒவ்வொரு இடத்திற்கும் சென்ற வாகனம் முதல் செல்லும் வழிகள், ஆறு, நீர்வீழ்ச்சி, பழம், காய்கள், உணவு, விலங்கு, பறவை, மரம் , விடுதி, அரண்மனை , நினைவு சின்னங்கள், தலைவர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இடங்கள், நண்பர்கள், பனி, மலை, குன்றுகள், வாழ்வியல் முறை என அனைத்து அனுபவங்களையும் நூலாக்கிருக்கிறார்
இதில் ஜெயமோகனின் யானை டாக்டர் நூலை படித்திருந்த ராகுல் காட்டில் உடைந்து கிடந்த பாட்டில்களை  பொருக்கி அதனை கிளின் பண்ணியதோடு மட்டுமில்லாமல் வனத்துறை அதிகாரிகளிடமும் அதனை  ஏன் தடுக்க முடியவில்லை. விலங்குகள் கால்களில் குத்தினால் அதன் நிலைமை என்ன ஆகும் என்று யானை டாக்டர் நூலை படித்து உணர்ந்த நிலையில் கேட்டது, இனிமேல் எந்த பயணம் செய்யும்போதும் மற்ற சக நண்பர்களையும் பாட்டில்களை காட்டிலோ, வயல்வெளிகளிலோ தூக்கி போடுவதை தடுக்க செய்யவேண்டுமென்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்திவிட்டு செல்கிறார்.
– ராஜேந்திரன் வெங்கடேசன்

About the author

ramthangam

Add comment

By ramthangam