கடவுளின் தேசத்தில் பாகம்-2 – சுகந்தி

கடவுளின் தேசத்தில் இது இரண்டாம் பாகமாக வெளி வந்துள்ளது.   சுற்றுலா நூலாக வந்தாலும் அந்த இடங்களின்  வரலாற்றை  பேசம் அருமையான நூல்.  தலச்சேரி  பாரிஸ் ஓட்டலில் தலச்சேரி பிரியாணிசாப்பிட்டு   சுற்றி பார்க்கலாம்.  பிரியாணியை அச்சு வேற ஆணிவேறாக வர்ணணை பண்ணியிருக்கார் .சாப்பிடாதவருக்குகூட சாப்பிடத் தோனும்.  பாரிஸ் ஹோட்டலை எம்.கே. அகமது ஹாஜி என்பவர் 1942 வாக்கில் தொடங்கினார். இலங்கையிலிருந்து திரும்பிய அவர் ‘பாரிஸ் பேக்கரி’ என்ற பேக்கரியை முதலில் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக தம் பிரியாணியை அறிமுகப்படுத்தினார். அதன் ருசி வாடிக்கையாளர்களுக்கு விருப்பமாகி இன்று ‘பாரிஸ் பிரியாணி’யாகி தலச்சேரியின் அடையாளமாகவும் இருக்கிறது.

போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்களை தொடர்ந்து இந்தியாவை கடல் மார்ககமாக அடைந்த பிரெஞ்சுக்காரர்கள் கால்பதித்த இடம் இந்த தலச்சேரி. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் தெற்கு மலபாரின் தலைநகராகவும் தலச்சேரி இருந்திருக்கிறது.ஐரோப்பியர்களை இந்தியாவுக்கு இழுத்து வந்ததில்  பெரும் பங்கு மிளகு ,ஏலக்காய், கிராம்பு இவைகளுக்கே.
தலச்சேரியின் சதுர வடிவ கோட்டை  ,1921ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல் துறையால் இந்த கோட்டை பாதுகாக்கப்பட்டு வருகிறது. மொழி பெயர்ப்பாளர் நண்பர் ஷபியுடனான சந்தித்து உரையாடிய நிகழ்வு  நெகிழ்வு.

கோட்டயம் .   கோட்டையும் அகழியும் இருந்ததால் கோட்டயம் என பெயர் வந்ததாக அறியப்படுகிறது. இங்கிருக்கும்  மகா விஷ்ணு கோவில் 9ஆம் நூற்றாண்டில்  நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலம் . எழுத்துக்களின் நகரமான கோட்டயம் ஏராளமான பத்திரிகைகளின் பிறப்பிடமாக உள்ளது. எண்ணற்ற கோயில்களும் தேவாலயங்களும் , மசூதி ,சரணாலயங்கள் என நிறைய சுற்றுலாத் தளங்களை உள்ளடக்கியது. எழுத்தாளர் மனோஜ் குரூர் இந்த ஊரில் தான் வசிக்கிறார்.    பண்டைய ஆட்சியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரிகளை விட 72 அடி தூரத்தில் தான் நாடார்கள், ஈழவர்கள், புலையர்கள் என 18 சாதி மக்கள் நடக்க வேண்டும். ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. வெளிப்படையாக சொன்னால் ஒரு நம்பூதிரி வீட்டில் தங்கி நம்பூதிரியோடு கைகுலுக்கி நம்பூதிரி பயன்படுத்தும் சாப்பாட்டுத் தட்டில் உணவருந்தி விட்டு வருவது எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இதில் நான் மனோஜுக்கு தான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். மனோஜ் மட்டுமல்ல அவரது குடும்பமும் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை முற்போக்கை பின்பற்றுகிறது.

ஃபோர்ட் கொச்சி போர்ச்சு கீசியர்கள்,டச்சுக் காரர்கள் பின் ஆங்கிலேயர்கள் என 1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை அங்கே ஆட்சி செய்தனர். டச்சு அரண்மணையின் வரலாறு
1663ல் நடந்த டச்சு – போர்த்துகீசிய மோதலில் மட்டஞ்சேரி அரண்மனை தாக்கப்பட்டு, பின்னர் அது டச்சுக்காரர்களால் விரிவுபடுத்தி, புனரமைக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்ட பிறகு ‘டச்சு அரண்மனை’ யானது. இங்கிருக்கும் யூத தேவாலயம், யூத தெருவில் முன்பு யூத சமையல், உணவுப் பொருட்கள் பிரபலமாக இருந்தது. கேரளாவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் அதிகம் கிடைப்பதால், யூதர்களின் தினசரி சமையலில் அவை முக்கிய பயன்பாடாக இருந்துள்ளது. யூத கட்லெட்டும், ரவை, முட்டை, சர்க்கரை கொண்டு செய்யப்படும் கொச்சின் யூத கேக் ரொம்ப பிரபலமாக இருந்தது. அவர்கள் தினசரி உணவில் மீன், தேங்காய், அரிசி, கீரைகள், மசாலாப் பொருட்கள் எடுத்துள்ளனர். இதுதவிர கொச்சின் யூத தேங்காய் சாதம் தனித்துவமான உணவுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம்,வாஸ்கோட காமா  கல்லறை ,பரேட் மைதானம் ,அருகில் இருக்கும் கடற்கரையில் சீன வலையில் மீன்பிடிக்கும் அழகை ரசிக்கும் கூட்டம்.

மூணார். இங்கு மிக முக்கியமாக  டீ மியூசியம் 1924 ஆம் ஆண்டு ஜூலையில் ராத்திரியும் பகலும் கனமழை பெய்ததில் மலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து மண்மேடுகள் இளகி ரயில்வே ஸ்டேஷன், ரோப்வே ஸ்டேஷன் என எல்லாவற்றையும் அடித்துச் சென்றுவிட்டது. அப்போது மூணார் முழுவதுமாக அழிந்து நில அமைப்பும் மாறிப்போனது. இது டாடா டீ கம்பெனியால் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தோட்டங்களில் மக்கள் உழைத்த உழைப்பும், தேயிலை வளர்த்தல், உலர்த்துதல், பறித்தல் மற்றும் கடைசியாக பேக்கேஜிங் செய்தல் என முழு செயல்முறை, இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடுகள் அன்றைய மூணார் முதல் இன்றைய மூணார் வரை பற்றிய இருபது நிமிட ஆவணப்படம் அங்கே திரையிடுகிறார்கள். 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிரானைட் கற்களின் மீது அமைக்கப்பட்டிருக்கும் சூரியக் கடிகாரம் பார்க்க கூடிய ஒன்று. முதிரைப்புழா, நல்லதண்ணி, குண்டலி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பதால் மூணார் என்று பெயர் வந்தது.

இது தென்னிந்தியாவின் காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. முக்கோணவியல் ஆய்விற்குப் பிறகுதான் அண்ணாமலை  மலைகள்,கண்ணன் தேவன் மலைகள் என  நில வரலாற்றில் முதன் முதலாக பதிவு செய்யப்படது. 1870களில் ஜான் டேனியல் மன்ரோவின் வருகையுடன் மூணார் வெளி உலகிற்கு அறியப்பட்டது. பூஞ்சர் அரண்மனையின் அப்போதைய அரச குடும்பத் தலைவரான ரோஹினி திருநாள் கேரள வர்மா வலிய ராஜாவை சந்தித்துப்  பேசி 1877 ஆம் ஆண்டு, சுமார் 1,36,600 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய கண்ணன் தேவன் மலைகள் ஜான் டேனியல் மன்ரோவுக்கு ஆண்டு குத்தகை வாடகை ரூபாய். 3,000க்குக் கிடைத்தது. பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூபாய். 5,000த்தையும் மன்ரோ கட்டினார்.இரவிகுளம் வரையாடுகள், டாப் ஸ்டேஷன்., மாட்டுப்பட்டி அணை பார்ப்பதற்குரிய இடங்கள். இங்கு  1902ல்ரயில் போக்கு வரத்து ருந்திருக்கிறது.  பெரும் மழையில் அது  அடித்துச் சென்றதால் அதன் பிறகு அதை மீண்டும் செப்பனிடாமல் விட்டதாகவும் கூறப்படுகிறது.  கேரளாவின் காய்கறித்தேவையை நிவர்த்தி செய்யும் வட்ட வடா காய்கறி  கிராமத்துடன் பயணம் நிறைவு பெறுகிறது.  நிறைய‌வரலாற்று செய்திகளுடனான பயண புத்தகம்..
– சுகந்தி

கடவுளின் தேசத்தில் பாகம்- 2

அமேசான் கிண்டில்

About the author

ramthangam

Add comment

By ramthangam