ஊர் சுற்றிப் பறவை- மதிப்புரை- ரா. ராகுல். சே

ராம் நண்பரை சந்தித்ததின் நினைவாக எனக்கு அவர் அளித்த ஊர் சுற்றிப் பறவை குமரி மாவட்டத்தில் ஒரு சரித்திரப்பயணம் என்ற நம் மண்ணின் வரலாற்று புத்தகத்தை படித்து முடித்தேன். இந்த புத்தகம் நம் குமரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களை, சுதந்திர போராட்ட காலத்தில் எந்த ஏட்டிலும் பதியாத வீர தியாகிகளை பற்றிய தகவல்களை நம் ஊரின் பெயரின் வரலாற்றை , நாம் பார்த்து கடந்து சென்ற சுற்றுல இடங்கள், கோயில்கள், போன்றவற்றை பற்றி நாம் அறியாத தகவல்கள், அழகாக நமக்கு எடுத்து கூறுகிறார் ராம்.

இதற்காக மனிதர் நல்லா உழைத்திருக்கிறார். உதயகிரி என்பது மலையின் பெயர். பத்மநாதபபுரம் அரண்மனையிலிருந்து இம்மலையை பார்த்தால் இங்கிருந்துதான் சூரியன் உதிப்பது போல தெரியும் அதனால்தான் உதயகிரினு அந்த பெயர் வந்தது எனவும்,  இந்தியாவின் கடைசி இரயில் நிலையம், திற்பரப்பு அருவியின் பழைய பெயர், சிதறால் மலைக் கோவிலில் உள்ள உறிஞ்சிப்பாறை, பள்ளியாடியின் வரைவு போன்ற தகவல்கள் பிரம்மாண்டவும், பிரம்மிப்பும் அளிப்பவை இது இவரின் முதல் புத்தகம். இந்தபுத்தகத்தில் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை அழகாக காட்டி இருக்கிறார் ஒவ்வொரு நபரும் படிக்க வேண்டிய, வீட்டில் பாதுகாக்க வேண்டிய புத்தகம் இந்த ஊர் சுற்றிப் பறவை. நம்ம அரசு புத்தகத்தின் அறைகளில் இருக்க வேண்டிய புத்தகம் இந்த ஊர் சுற்றிப் பறவை. கட்டி அணைத்து கொள்கிறேன் நண்பர் ராம் தங்கத்தை.

என்றும் அன்புடன்.
ரா.ராகுல் சே.

About the author

ramthangam

Add comment

By ramthangam