ராம் தங்கம் அவர்களின் புத்தகத்தை படிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். இந்த புத்தக கண்காட்சியில் அவரின் புத்தகம் வாங்கினேன். முதல் புத்தகம் இதுதான் அவரின் புத்தகம் படிப்பது இதை வாங்கி கொடுத்த கோடி அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆம் நல்ல பயண புத்தகம். இதை வைத்துக்கொண்டு கன்னியாகுமரி நாகர்கோவிலில் ஒரு சுற்று சுற்றிவந்துவிடலாம். சந்து பொந்து கூட போய் வரலாம். இது ஒரு முழுமையான அந்த மாவட்டத்தின் வரைபடம் என்றுதான் சொல்ல வேண்டும்.
முதலில் அங்குள்ள எழுத்தாளர்கள் பற்றி குறிப்புகள் யார் யார் என்று தரும் பட்டியல் மிக அருமை. நிறைய பேரை நான் அறிந்ததில்லை. இதை அறிந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகப் பெருமையாக உள்ளது.
தனது தங்கையின் திருமணத்திற்கு தனது நண்பர்களை சென்னையிலிருந்து கூட்டிச் செல்கிறார். போகும் போது தனது மாவட்டத்தின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார் வினோத். அங்குள்ள சிறப்புகள், பார்க்க வேண்டிய இடங்கள், ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது உள்ள நினைவுச் சின்னங்கள், மன்னர்கள் அரண்மனைகள், அங்குள்ள உணவு முறைகள் மக்களால் கொண்டாடப்படும் விழாக்கள் என்று எல்லாவற்றையும் எடுத்துச் சொல்கிறார்.
இத்தனை வகையான நிகழ்வுகள் அங்கு உள்ளதா? என்று எண்ணம் தான் தோன்றுகிறது.
நான் இதுவரை கன்னியாகுமரி சென்றதில்லை குழந்தையாக இருக்கும்போது ஒரு முறை சென்றுள்ளே ஞாபகம் அது மட்டும்தான். அப்போது இந்த அளவு அறிந்ததில்லை இனி போக வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு தந்து விடுகிறார் எழுத்தாளா் .
மிகப்பெரிய தனது மாவட்டத்தில் கைடு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு இடத்தில் எழுத்தாளர் பொன்னீலன் பேருந்துக்காக காத்து இருப்பது போலவும் அங்கு சென்று அவரை சந்தித்துப் பேசுவதும் சொல்லி இருப்பாா். நாமும் அவரை சந்தித்த ஒரு உணர்வு ஏற்படுகிறது படிக்கும்போது ஆம் அது உண்மையாகவே எனக்கு தோன்றியது.
பல இடங்களை நமக்கு காட்டி விட்டார் ஆசிரியர். எத்தனை இடங்களை நாம் காணவேண்டும் என்ற ஒரு உணர்வை மனதில் விதைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலா வரைபடம் நிறைந்த புத்தகம் இது.
– நடராஜன் செல்லம்
ஊர் சுற்றிப் பறவை
பதிப்பகம் – வானவில் புத்தகாலயம்
விலை -199
பக்கங்கள் -16