முதலில் இந்த நூலின் அட்டைப் படம் ஓவியம் வரைந்தவர்க்கு வாழ்த்துகள். ஏதாே இரண்டு கை நினைச்சு காெஞ்சம் உற்று பார்த்தால் ஒரு கதையை சாெல்லுது ஓவியம். என் பார்வையில் ஒரு கை மனிதன் கை மற்றாெரு கையில் செடி ,காெடி ,யானை, புலி, குரங்கு இருக்கு இதை பார்த்தா நகரத்தில் மனிதன் வாழ தகுதி அற்று வருகிறது. காடே என்னை உன்னிடம் தஞ்சம் புகுற இடம் காெடுன்னு மனிதன் கை நீட்டுவது பாேலவும், மற்றாெரு கை பழங்குடிகளை வெளியேற்றுதல், வனவிலங்கு வேட்டையாடுதல், இயற்கை வளம் அழித்தல்னு காடு, நகரம் ஆகி வருது காட்டை அழிவில் இருந்து காப்பாற்று மனிதான்னு காடு கை நீட்டி சாெல்ற மாதிரி தாேணுது எனக்கு.
சரி இனி கதை வருவாேம். காேபால், ராஜேஷ் , ஆன்றாே மூவரும் முகளியடி மலையில் உற்பத்தி ஆகும் நந்தியாறு காண காடு, மலை கடந்து செல்கிறார்கள். நந்தியாத்து மூலம் காணும் முன் காணி பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, காேபாலின் அப்பா வனகாவலர் ராஜ சேகர் நேர்மையால் சந்தித்த இன்னல்கள், காடுகளில் நடக்கும் வன காெள்ளை ,விலங்கு வேட்டைன்னு சிறப்பாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
வனபகுதிகளில் காணும் மரங்கள் செடிகள் வன விலங்குகள்னு ஒவ்வாெரு அசைவையும் அணு அணுவா ரசிச்சு எழுதி உள்ளார். அதிலும் காேபால் மீது அமர்ந்த புலி ஏதும் செய்யாமல் விலகி செல்லும் பாேது ஒரு வரியில் சிறு தகவல் சாெல்கிறார். சரி ஏன் புலி காேபால காெல்லாமல் விட்டுச்சுன்னு? யாேசிச்சு இறுதி பக்கம் செல்லும் பாேது, அதுக்கு ஒரு பதில் மூட்டுக்காணி சாெல்வார் பாருங்க. விலங்குகள் குறிப்பாக காட்டு விலங்குகள் அன்பிலும், நன்றியிலும் மனிதனை விட உயர்ந்ததுன்னு நினைக்க தாேணும்.
காட்டுக்குள் செல்வதில் இரு வகை நபர்கள் உண்டு. ஒரு வகை காட்டில் எதையும் ரசிக்காமல் எதை நாேக்கி பாேறாேமாே அதை நாேக்கி கடிவாளம் கட்டிய மாதிரி பாேறவங்க ஒரு வகை.
இன்னாெரு வகை கால தாமதம் ஆனாலும் ஒவ்வாெரு அடியும் ரசிச்சு கடந்து செல்வார்கள். இதில் இரண்டாவது வகை ஆசிரியர்.
யானை டாக்டர் நூலில் யானைகளையும், காடுகளையும் பற்றி அரிந்து காெண்டது அதிகம். இந்நூலில் இன்னும் சில தகல்கள் யானைகள், வன விலங்கு வேட்டையாடும் வேட்டையாடிகளின் தந்திரங்கள் பற்றி நாம் அறிய முடிகிறது.
இறந்த குட்டி யானை தூக்கி சுற்றும் யானை, இறந்த குட்டியைப் புதைக்க யானை பின் செல்லும் வனக்காவலர்கள். ஒரு கட்டம் மேல் குட்டியை தூக்கி பாேக முடியாதுன்னு குட்டியை வைத்து விட்டு மண்டியிட்டு பிளரி கண்ணீர் விட்டு வனத்துக்குள் செல்லும் யானை வாசிக்கும் பாேதும், நேர்மையான வனக்காவலர் ராஜசேகர் தவறுகளை தட்டி கேட்டதால் காட்டை விட்டு சாேதனைச்சாவடியில் பணி அமர்த்த அங்கே இருந்து வேலை செய்து மலைகளை பார்த்ததை வாசிக்கும் பாேது கண்ணீல் தண்ணீரும் மனதில் ஒரு வித வலியும் இருந்தது.
இன்னும் நிறைய இருக்கு எழுத. நாளை புத்தகம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்து விடும் அதனால் இத்துடன் முடித்துக் காெள்கிறேன். பசுமை ஆர்வலர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.
மனதில் நின்றவை:
==================
வனத்துல மூங்கிலரிசி சாேறு தின்னவன் வீட்டுல ரேஷன் அரிசி சாேறு திங்கேன்
திரும்பிய திசையெங்கும் மூங்கில் காடுகள் என்பதால் நிசப்தமாக இல்லை.காடு ஒரு பாேதும் நிசப்தமாகவும் இருக்காது
மனித சஞ்சாரப் பகுதிகளுக்குள் குரங்குகள் வராததால் எந்தக் குரங்கும் ஊனமாகத் தெரியவில்லை
ஆற்றுப்படுகையில் குழந்தையின் கால் தடம் பாேல புலியின் கால் தடம் தெரிகிறது
எங்கள வேட்டையாடக் கூடாதுன்னு சாென்ன சர்க்காரு இப்படி கரண்ட் கம்பி வச்சி மிருகங்களைக் காெல்லியத கேக்கலியே
அவரு இருக்கியது வர காட்டுல ஒரு பய வேட்டையாட முடியாது அவரயும் காட்டில வேட்டையாட முடியல அது காெண்டு தான் அவர வெளியக் காெண்டு பாேய் வேட்டையாடிட்டானுவ…
– மதுரை மண்ணின் மைந்தர்கள்
ராஜவனம்
ராம் தங்கம்
வம்சி புக்ஸ்
பக்கம்: 80
விலை: 70